தமிழ்நாட்டில் 38.9% எம்.பிக்கள் தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு நிதியாண்டிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி வழங்கி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியை தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள தீர்க்க, மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நியமன எம்.பிக்கள் (இளையராஜா, சச்சின் டெண்டுல்கர்) போன்றவர்கள் எந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்காக இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சூழலில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 3,965 ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் ரூ.2387 கோடி நிதி கடந்த மார்ச் 30 வரை செலவிடப்பட்டுள்ளது. ரூ.1,578 கோடி செலவு செய்யப்படவில்லை. அம். மத்திய அரசிடம் இருந்து இந்த நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் கெட்டு பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

உலகளவில் 7வது இடத்தை பிடித்த அதிமுக..! 15 வது இடத்தை கூட இடம் கூட பிடிக்க முடியாத திமுக- ஆர்.பி.உதயகுமார்

சரி, இப்படி நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாத மாநிலங்களில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது தெரியுமா? இமாச்சல பிரதேசம் தான். அம்மாநிலத்தில் 48.2% எம்.பிகள் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் ஹரியானா உள்ளது. ஹரியானாவில் 41% எம்.பிக்கள் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தவில்லை. இதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது தான் அதிர்ச்சி. தமிழ்நாட்டில் 38.9% எம்.பிக்கள் தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை எம்.பிக்கள் 39 பேர், மாநிலங்களவை எம்.பிக்கள் 19 பேர் என மொத்தம் தமிழ்நாட்டில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எம்.பிக்களுக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 285 கோடி ஒதுக்கபப்ட்டது. இந்த தொகையில் ரூ.111 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. ரூ.174 கோடி ரூபாய் மத்திய அரசின் கஜானாவில் செலவு செய்யப்படாமாலே உள்ளது.

தமிழ்நாட்டில் சாலை, குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல், பலர் தவித்து வரும் நிலையில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் பயன்படுத்தாமல் வீணடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்.! சென்னைக்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள்