நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்.! சென்னைக்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் வகையில் முதல் கட்ட சோதனை இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தீவிரம்
மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்தது. இதனையடுத்து 4ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் தேர்தல் என்னும் திருவிழா தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வியூகங்களை அமைத்து வருகிறது. 3 வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதே போல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவை வீழ்த்த திட்டம் தீட்டி வருகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.
சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள்
ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதே போல வாக்காளர் பட்டியலை தயார் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் ஆகிய இயந்திரங்களின் சோதனை இன்று தொடங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறுகையில், வாக்கு பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனை இன்று தொடங்க இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் இன்று காலை நடைபெறவுள்ள சோதனையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மண்டலம் வாரிய வாக்குப்பதிவு இயந்திரம் சோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்