உலகளவில் 7வது இடத்தை பிடித்த அதிமுக..! 15 வது இடத்தை கூட இடம் கூட பிடிக்க முடியாத திமுக- ஆர்.பி.உதயகுமார்

உலகளவில் அதிமுக 7வது இடத்தையும், இந்திய அளவிலே மூன்றாவது இடத்தில் பெற்றிருப்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியான செய்தியாக இருப்பதாக  ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

RB Udayakumar said that AIADMK has occupied the position of 7th largest party in the world

உலகத்தில் மிகப்பெரிய கட்சி எது?

உலக அளவிலான அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் எண்ணிக்கை குறித்து, ரேங்க் வேர்ல்ட் அப்டேட் என்கிற நிறுவனத்தில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல் இடத்தில் பாரதிய ஜனதாகட்சி, 2 வது இடத்திலே சைனீஸ் கம்யூனிஸ்ட் பார்ட்டி, 3 வது இடத்தில் டெமாக்ரடிக் பார்ட்டி, 4 வது இடத்திலே இந்தியன் நேஷனல் காங்கிரஸ்,

5 வது இடத்தில் ரிபப்ளிக் கட்சி 6வது இடத்தில் ஜஸ்டின் டெவலப்மெண்ட் பார்ட்டி, உலக அளவில் 7வது இடத்திலே எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இடம்பிடித்திருப்பதாக தெரிவித்தவர்,  இந்திய அளவிலே மூன்றாவது இடத்தில் பெற்றிருப்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியான செய்தியாக இருப்பதாக கூறினார். 

 

கருத்து கணிப்பில் எடப்பாடி

உலகிலேயே மிகப்பெரிய கட்சி எது என்று பார்க்கிற போது இன்றைக்கு பெரிய கட்சிகளும், லெட்டர்பேடு கட்சிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கட்சிகள் இருக்கிறது. எடப்பாடியாரின் தலைமையில் உள்ள அஇஅதிமுக  7 வது இடத்தை  பிடித்தது என்பது எல்லோருக்கும் புதிய உற்சாகத்தையும், புதிய உத்வேகத்தையும்,புதிய ஆற்றலையும் இன்றைக்கு தந்திருப்பதாக தெரிவித்தார். ஆனால்  இதில் திமுக 15 இடத்தை கூட இடம் பிடிக்கவில்லை என விமர்சித்தார்.  சமீபத்தில் யார் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சர்வேயில் எடப்பாடியாரின் ஆட்சியையும், ஸ்டாலின் ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து அதில் எடப்பாடியார் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று 53 சதவீதம் பேரும், ஸ்டாலின் ஆட்சிக்கு வெறும் 42 சகவீதம் தான் சிறப்பாக இருந்தது என்று கூறி உள்ளதாகவும் குறிப்பிட்டுளனர். 

RB Udayakumar said that AIADMK has occupied the position of 7th largest party in the world

அதிமுகவின் சாதனைகள்

எடப்பாடியார் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி பிரச்சினைக்கு தீர்வு, 2 கோடி 18 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு, ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கம் என அவர் முதலமைச்சராக இருந்த போது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சேவை தான் இன்றைக்கு மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும் என்பதை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகிறது. திமுக அரசு திட்டங்களை அறிவிக்கிறது தவிர அதை செயல்படுத்துவதில் 100 சதவீதம் தோல்வி அடைந்துள்ளது.  

RB Udayakumar said that AIADMK has occupied the position of 7th largest party in the world

எடப்பாடியாருக்கு தான் பெருமை

ஒரு  சாதாரண கிளைச் செயலாளராக இருந்து தன் உழைப்பால் கட்சியை சிறப்பாக வழி நடத்தி, உலக அளவில் அதிமுகவை ஏழாவது இடத்திற்கு கொண்டு போய் சேர்த்த எடப்பாடியாருக்கும், அவருக்கு உறு துணையாக இருந்த தொண்டருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இது உலகத் தமிழ் இனத்திற்கு பெருமையாகும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

 உலகத்திலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எது.? அதிமுக, திமுகவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?- வெளியான தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios