சென்னை வழியாக ரஷ்யாவுக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து - மத்திய அமைச்சர் தகவல்

தமிழகம் மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதாகவும், பல்லவர்கள், சோழர்கள் காலத்தில் இருந்தே கடல்வழி வணிக வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

tamil nadu has a huge and traditional culture said central minister sarbananda sonowal in chennai vel

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் இருந்தே கடல்வழி வணிக வரலாற்றைக் கொண்டுள்ளது. சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 3 பெரிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.

சாகர்மாலா, பாரத்மாலா, பிரதமரின் விரிவு சக்தி பெருந்திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் மிகுந்த கவனம் செலுத்துகிறது. 2014-ம் ஆண்டு  முதல் தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் 45-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ.16 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ரூ.93 ஆயிரத்து 671 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.35,247 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 

மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்த நமக்கு காளரை தூக்கிச் சென்று வாக்கு கேட்கும் தகுதி உள்ளது - எஸ்.பி.வேலுமணி

கடந்த 10 ஆண்டுகளில், மூன்று பெரிய துறைமுகங்களின்  சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 167 மில்லியன் டன்னில் இருந்து 338 மில்லியன் டன்னாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கப்பலின் செயல்பாட்டு நேரம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ், குந்துகால், பூம்புகார், சின்னமுட்டம், மூக்கையூர் ஆகிய 4 இடங்களில் மீன்பிடி துறைமுகத் திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் துறையில் புதுமைகளுக்காக சென்னை ஐஐடியில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர்  நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 36 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  மேலும் இது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு படியாகும். 10 ஆயிரத்து 324 கோடி மதிப்பிலான 30 திட்டங்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இவற்றில் ரூ.7,587 கோடி மதிப்பிலான 6 திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு துறைமுகங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

வருமான வரித்துறை மூலம் தொழில் அதிபர்களிடம் கல்லா கட்டும் பாஜக - ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு பிரதமர், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் கப்பல் மாற்று மையமாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார். நாளை அது நிறைவேறப் போகிறது. வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 7056 கோடி செலவில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத் திட்டம் உருவாக்கப்படும் எனவும் இதன் மூலம் நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒரு பெரிய கப்பல் போக்குவரத்து மையமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் இந்தத் துறைமுகத்தின் கொள்கலன் திறனை பல மடங்கு அதிகரிக்கும். 

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும்  இடையே கடல்  கப்பல் போக்குவரத்து குறுகிய தூர போக்குவரத்தாக உருவாக்கப்படும். இது பெஷாவிலிருந்து சென்னை மார்க்கமாக செல்லவும் மிக குறுகிய நேரத்தில் ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு கப்பல் வந்து சேர நேர்த்தியாக இருக்கும். இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. மேலும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி, ஏற்றுமதிக்கு  மிக பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு  அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios