Asianet News TamilAsianet News Tamil

சென்னை அண்ணாநகரில் குமரி ஆனந்தனுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் ..! ஏன் தெரியுமா..?

இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tamil Nadu government orders allotment of house to Tamil Nadu Congress senior leader Kumari Anandhan
Author
First Published Sep 27, 2022, 3:20 PM IST

குமரி ஆனந்தனுக்கு வீடு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரிஆனந்தன், இலக்கிய செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். தெலுங்கான மற்றும் புதுவை மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன்  தந்தை தான் குமரி ஆனந்தனர். இவர் தனக்கு  தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார் இதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கி உத்தரவிட்டார். இதற்கான ஆணையை இன்று  தலைமைசெயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி ஆனந்தனிடம்  வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்று அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர் பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர்-காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர், ஓவ்வறியாத உயரியத் தொண்டர் மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபெணம் மேற்கொண்டுள்ளார்.

ஓபிஎஸ் பதவி கொடுத்ததால் பண்ருட்டி ராமசந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் தொண்டர்கள்

Tamil Nadu government orders allotment of house to Tamil Nadu Congress senior leader Kumari Anandhan

வீட்டிற்கான ஆணை வழங்கிய முதலமைச்சர்

இலக்கியச் செல்வராகவும் மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்பவர் அன்பில் சிறந்த குமரி அனந்தன் அவர்கள் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும். ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவரது கோரிக்கையினைக் கனிவுடன் ஏற்று. அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி அதற்கான ஆணையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் திரு முத்துசாமி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் சு. திரு. பூச்சி எஸ். முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படியுங்கள்

அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் முயற்சி...! எச்சரிக்கையாக இருக்க திருமாவளவன் அட்வைஸ்

 

Follow Us:
Download App:
  • android
  • ios