ஓபிஎஸ் பதவி கொடுத்ததால் பண்ருட்டி ராமசந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் தொண்டர்கள்

பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர் செல்வம் நியமித்த நிலையில், அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

EPS orders removal of Panrutti Ramachandran from AIADMK

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வருகிறார். திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த கருத்தை இபிஎஸ் தரப்பு மறுத்துவிட்டது. இதற்கிடையே அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமசந்திரன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை மக்கள் விரும்பவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவியதாக கூறினார். அதிமுகவில் இதேதலைமை நீடித்தால் நீதி கட்சி எப்படி அழிந்தது அதேபோல் அதிமுகவும் அழிய நேரிடும் என குறிப்பிட்டு இருந்தார். 

இபிஸ்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஓபிஎஸ்..! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்ததால் பரபரப்பு

EPS orders removal of Panrutti Ramachandran from AIADMK

அரசியல் ஆலோசகராக நியமித்த ஓபிஎஸ்

 இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பற்றி கருத்து கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார். ஒரு கிளைக் கழக செயலாளர் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என்றும் தெரிவித்தவர்.  பண்ருட்டி  ராமச்சந்திரன் சென்ற கட்சிகள் எல்லாம் படுத்தே விட்டதாக தெரிவித்தார். இந்த கருத்து மோதலுக்கு நடுவில் ஓபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில் அதிமுகவின் அமைப்பு செயலாளரான பண்ருட்டி ராமசந்திரன் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்த அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரங்களில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதிமுக மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய ஓபிஎஸ்..! புதிய பொறுப்பு வழங்கி எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி

EPS orders removal of Panrutti Ramachandran from AIADMK

அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்

அதில் கழகத்தின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு செயல்பட்டதாலும், கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் அதிமுக அமைப்பு செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து பண்ருட்டி ராமசந்திரனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவரும் எம்ஜிஆர் காலத்து நிர்வாகியுமான பண்ருட்டி ராமசந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

பாஜக நெருக்கடிக்கு துணை போகும் காவல்துறை..! பொய்யான வழக்கில் எஸ்டிபிஐ அமைப்பினர் கைது- நெல்லை முபாரக்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios