- Home
- Tamil Nadu News
- தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா? உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்!
தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா? உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்!
TVK: திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஆட்சி மாற்றத்திற்கான அடிகோல் என பாஜகவின் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.இபிஎஸ் டெல்லி பயணம் குறித்தும் பேசினார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்: ஆட்சி மாற்றத்திற்கான அடிகோல் விழாவாக பஞ்சப்பூரில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் குடும்பத்தினர் பங்கேற்க வேண்டும் என நயினார் அழைப்பு விடுத்தார். ஏழு லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை பணிகள் துவக்கி வைக்கப்பட உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் என்பது பல விஷயங்களுக்காக சென்றிருக்கலாம். அதனை தொகுதி பங்கீடுக்காக மட்டும் என கூறமுடியாது. யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது பொதுமக்கள் தான், ஸ்டாலின் அல்ல. 200 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்வோம். புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் நிறுத்திவிட்டனர். திமுக என்ன திட்டங்கள் நிறைவேற்றினார்கள்? 28 மாதங்களாக 1000 ரூபாய் வழங்கப்படவில்லை. அதுவும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்த பணம் வழங்கப்பட்டது.
சிபிஐ, இடி போன்றவை தனி நிர்வாகம், நிறைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர ஆவலில் உள்ளனர். தமிழக வெற்றி கழகம் என்டிஏ உடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். பாரதிய ஜனதா கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழக பாஜக நிர்வாகி நீக்கம் உட்கட்சி விவகாரம் என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். நான் ஒரு எரிவாயு டீலர் என்பதால் இதனை உறுதிப்படக் கூறுகிறேன். அதேநேரம் ஹோட்டலில் உணவு குறைப்பதற்கும், எரிவாயு தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. நாளைய தினம் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்படும். 28 மாதங்களாக ஏன் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கவில்லை என முதல்வரை யாரும் கேள்வி எழுப்பவில்லை ஏன் என்றும் தெரியவில்லை. விஜயின் கொள்கை என்னவென்று முதலில் கூறிவிட்டு அதன்பின்னர் மற்ற கட்சிகளின் கொள்கை என்ன என்பதை கேட்கட்டும் என்றார்.

