அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் முயற்சி...! எச்சரிக்கையாக இருக்க திருமாவளவன் அட்வைஸ்

அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற சனாதன சக்திகள் முயற்சி செய்வதாகவும்,, அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் முயற்ச்சிப்பதால் அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Thirumavalavan has said that the Sangh Parivar organization is planning to destroy the AIADMK

சனாதன சக்தியை தனிமை படுத்த வேண்டும்

தமிழ் இதழியலின் முன்னோடியும், 'தமிழர் தந்தை' என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவியும் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து தமிழகம் தழுவிய சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த உள்ளதாகவும், திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், சனாதன சக்திகளை எதிர்க்கிற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், அனைவரும் ஒருங்கிணைந்து சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் அவர்கள் தீட்டும் சதி திட்டங்கள், மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Thirumavalavan has said that the Sangh Parivar organization is planning to destroy the AIADMK

அண்ணா சிலை அவமதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா சிலையை அவமதிக்கும் வகையில் செருப்பு மாலை அணிவித்து காவி துணியால் மூடி அவமதித்தது சங்பரிவார்களின் திட்டமிட்ட  வெறி செயல் என்று கூறிய திருமாவளவன், குற்றவாளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது ஒரு கலாச்சாரமாக பரவி வருவதாகவும் அதற்குப் பின்னால் சங்பரிவார் அமைப்புகள் தான் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதவதாகவும் தெரிவித்தார்.  

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிராக அவரச வழக்கு தொடுத்த திருமாவளவன்.. முடியாது என தூக்கி ஓரம் போட்ட நீதிபதிகள்..

Thirumavalavan has said that the Sangh Parivar organization is planning to destroy the AIADMK

அதிமுக எச்சரிக்கையாக இருங்கள்

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கும் சமூக நல்லிணக்க பேரணிக்கு அழைப்பு விடுத்த அவர் அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற சனாதன சக்திகள் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் திட்டுமிடுவதாக தெரிவித்த அவர், எனவே அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜகவினர் எந்த வித  குட்டி காரணம் அடித்தாலும் தமிழகத்தில் அவர்களின் திட்டம் பலிக்காது என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

சென்னையில் எம்ஜிஆர் சிலையின் மூக்கை உடைத்த மர்ம நபர்கள்.! குற்றவாளிகள் மீது நடவடிக்கை.?களத்தில் குதித்த ஓபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios