சென்னையில் எம்ஜிஆர் சிலையின் மூக்கை உடைத்த மர்ம நபர்கள்.! குற்றவாளிகள் மீது நடவடிக்கை.?களத்தில் குதித்த ஓபிஎஸ்
சென்னை தேனாம்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தலைவர்களின் சிலை உடைப்பு
அரசியல் கட்சியினர் மற்ற கட்சிகளை விமர்சித்து விட்டாலோ அல்லது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து விட்டால் அந்த கட்சியின் தலைவர்களின் சிலைகள் மீது தங்களது அதிருப்தியூ காட்டும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்று வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பதும், பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பதும் நடைபெற்று வருகிறது. இதற்க்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தும் வருகின்றனர். இந்தநிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்ததாக கூறி விழுப்புரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு சில மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்திருந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் முன்னாள் முதல்வர் அண்ணாவின் முழு உருவ சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. சிலையை சேதப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து, அதோடு ஆ.ராசாவின் படத்தில் கரும்புள்ளிகள் குத்தி திமுக கொடியினால் அண்ணா சிலையின் முகத்தை மூடியும் அவமதிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய ஓபிஎஸ்..! புதிய பொறுப்பு வழங்கி எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி
எம்.ஜி.ஆர் சிலை சேதம்
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அண்ணா சிலைக்கு அணிவித்திருந்த செருப்பு மாலை மற்றும் கொடியை அகற்றினர். ஆ.ராசாவின் படத்தையும் அகற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆர் சிலையின் மூக்கை மர்ம நபர்கள் உடைத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வும் அங்குள்ளவர்களிடம் சிலை சேதமானது தொடர்பாக கேட்டறிந்தார்..
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்
மேலும் இந்தச் செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை சரி செய்யவும், இனி வருங்காலங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதனிடையே எம்ஜிஆர் சிலை சேதம் ஏற்பட்டது தொடர்பாக போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மற்று்ம அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
அண்ணா சிலையை சேதப்படுத்தி காலணி மாலை.. ஆ.ராசாவின் படத்துக்கு கரும்புள்ளிகள் குத்தி அவமதிப்பு..!