அதிர்ச்சி !! ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் கிட்னி செயலிழப்பு.. சக மாணவன் கொடுத்ததாக புகார்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் சக மாணவன் கொடுத்ததாக குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Student kidney failure after drinking acid mixed drink in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்த சுனில் என்பவரது மகன், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரிடம் பெற்றோர் விசாரித்ததில், பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக மாணவன் குளிர்பானம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சையாக அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவனின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  மேல் சிகிச்சையாக கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க:9 ஆண்டுக்கு பிறகு பழிக்கு பழி.. சென்னையில் கஞ்சா வியாபாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர வைக்கும் தகவல்.!

அங்கு சிறுவனை ஸ்கேன் செய்து பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்ததாகவும் அதனால் சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டு,  இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், களி களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக காரைக்காலில் தன் மகளை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனுக்கு, அந்த மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க:ஆபாச பேச்சு, இடுப்பில் கிள்ளி பாலியல் தொல்லை.. இளம்பெண்ணை ஒரு நைட்டுக்கு கூப்பிட்ட ஓனர் கைது..!

இந்நிலையில் கன்னியாகுமரியில் சக மாணவன் கொடுத்ததாக கூறப்படும் குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios