Asianet News TamilAsianet News Tamil

9 ஆண்டுக்கு பிறகு பழிக்கு பழி.. சென்னையில் கஞ்சா வியாபாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர வைக்கும் தகவல்.!

சென்னை புளியந்தோப்பு காந்திநகர் எட்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவர் மீது இரண்டு கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

chennai ganja dealer murder case.. 5 people Arrest
Author
First Published Oct 3, 2022, 7:20 AM IST

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலைக்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

சென்னை புளியந்தோப்பு காந்திநகர் எட்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவர் மீது இரண்டு கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 30ம் தேதி அப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை  சுவற்றின் மீது நண்பர்களுடன்  கார்த்திகேயன் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்திகேயனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

chennai ganja dealer murder case.. 5 people Arrest

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரிவந்தது. இதையடுத்து, குற்றவாளிகளான பிரேம்குமார் அவரது கூட்டாளிகள் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) நாய்கடி கார்த்திக் (21), வியாசர்பாடியை சேர்ந்த குரு (எ) நரேஷ் குமார் (29), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) சுகுமார் (19), சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த  உப்புளி (எ) யுவராஜ் (26) ஆகிய 5 பேரை பேசின் பிரிட்ஜ் போலீசார் கைது செய்தனர்.

இதில், முக்கிய குற்றவாளியான பிரேம்குமார் அளித்த வாக்குமூலத்தில்;- கடந்த 2013ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எனது தம்பி ரஞ்சித்தை ஏரியா பிரச்னையில்  கார்த்திகேயன் கொலை செய்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் பல ஆண்டாக கார்த்திகேயனை பின்தொடர்ந்து கொலை செய்ய திட்டமிட்டேன்.

chennai ganja dealer murder case.. 5 people Arrest

ஆனால், சரியான தருணம் கிடைக்கவில்லை. கடந்த  மார்ச் மாதம் பேசின் பிரிட்ஜ் போலீசாரால் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயன், சம்பவத்தன்று புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே இருப்பது அறிந்து, கூட்டாளிகளுடன் அங்கு சென்று, வெட்டி கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏரியா பிரச்னையில் தனது தம்பியை கொன்றவனை  9 ஆண்டுகள் கழித்து அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios