ஆபாச பேச்சு, இடுப்பில் கிள்ளி பாலியல் தொல்லை.. இளம்பெண்ணை ஒரு நைட்டுக்கு கூப்பிட்ட ஓனர் கைது..!
எட்வின்சன் அடிக்கடி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அருகில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக பேசுவது, கிள்ளுவது போன்ற செயல்களை அரங்கேற்றி வந்துள்ளார். இளம்பெண் எவ்வளவோ கண்டித்தும் எட்வின்சன் கேட்கவில்லையாம். தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது, கிள்ளுவது போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிறுவன அதிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே பாலவிளை புறாவினை பகுதியை சேர்ந்தவர் எட்வின்சன் (38). மார்த்தாண்டம் சிஎஸ்ஐ காம்ப்ளக்ஸ் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் 28 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி அஞ்சுக்கூற்று விளை வடக்கு தெருவில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், எட்வின்சன் அடிக்கடி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அருகில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக பேசுவது, கிள்ளுவது போன்ற செயல்களை அரங்கேற்றி வந்துள்ளார். இளம்பெண் எவ்வளவோ கண்டித்தும் எட்வின்சன் கேட்கவில்லையாம். தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க;- பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நிதி நிறுவன பெண் ஏஜெண்ட்!விசாரணையில் பகீர்
இந்நிலையில் சம்பவத்தன்று இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் எட்வின்சன். அப்போது, தன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்கவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு இளம் பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே கணவரிடம் அது பற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து இளம் பெண்ணின் கணவர் உடனே எட்வின்சனை தொடர்புகொண்டு பேசி இருக்கிறார்.
அப்போது இளம்பெண்ணின் கணவரை எட்வின்சன் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இது தவிர பெண்ணின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாக இளம்பெண் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எட்வின்சனை கைது செய்தனர்.
இதையும் படிங்க;- காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!