காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (27). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் வினிதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சந்துரு வீடு புகுந்து மனைவி, மாமியார் கண்முன்னே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (27). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் வினிதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வருண் என்ற 5 வயதில் மகனும், சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், வினிதா தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம்.. பட்டதாரி இளைஞர் கைது..!
எனவே, மனைவி பிரீத்தி மற்றும் குழந்தைகளை பார்க்க ரவுடி சந்துரு அடிக்கடி கூடுவாஞ்சேரி அருகே, தைலாவரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல மாமியார் வீட்டுக்கு வந்து சந்துரு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, 3 இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சந்துருவை சுற்றிவளைத்தனர். அப்போது,
மனைவி வினிதா, மாமியார் செல்வி (47), மாமனார் பெருமாள் (49) ஆகியோர் கூலிப்படையிடம் என் மருமகனை ஒன்றும் எதுவும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் தலை, கை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துரு மனைவி, மாமியார் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
உடனடியாக இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் சந்துரு உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சந்துரு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பட்டப்பகலில் ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்