புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்
சவுந்தர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, கணவன், மனைவி போல் சவுந்தர்யாவின் வீட்டில் விஜி வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக குடித்து விட்டு வந்து கள்ளக்காதலியிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் சவுந்தர்யாவின் இரு மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
புதிய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் சவுந்தர்யா(32). இவர் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர்.
இதையும் படிங்க;- குப்பையில் கை, சாக்கடையில் கால்,கிணற்றில் தலை! 70 ஆண்டுக்கு பிறகு ஆளவந்தார் மர்டரை நினைவுப்படுத்தும் கோவை கொலை
இந்நிலையில், சவுந்தர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, கணவன், மனைவி போல் சவுந்தர்யாவின் வீட்டில் விஜி வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக குடித்து விட்டு வந்து கள்ளக்காதலியிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் சவுந்தர்யாவின் இரு மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், தனது பிரச்னையை தன்னுடன் வேலை செய்து வந்த பிரபு(27) என்பவரிடம் தெரிவித்துள்ளார். சவுந்தர்யாவுக்கு அவர் ஆறுதல் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் எப்படியோ முதல் கள்ளக்காதலன் விஜிக்கு தெரிய வந்ததை அடுத்து சவுந்தர்யா, பிரபு இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து விஜியை கொலை செய்வது என்று முடிவு செய்தனர். இந்நிலையில், அளவுக்கு அதிகமாக விஜிக்கு மது கொடுக்கப்பட்டு போதையில் இருந்த அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல சவுந்தர்யா வேலைக்குச் சென்று விட்டார்.
இதனிடையே, சவுந்தர்யா மகன்கள் பக்கத்து வீட்டுக்கு சென்று விஜியை யாரோ கொலை செய்து விட்டனர் என்று கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 2வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சவுந்தர்யா விஜியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு மறுப்பு? ரிசாட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை.. முக்கிய பாஜக தலைவரின் மகன் சிக்கினார்..!