பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நிதி நிறுவன பெண் ஏஜெண்ட்!விசாரணையில் பகீர்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார்.
செங்கல்பட்டில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கூலிப்படையை ஏவி கொலை செய்த தனியார் நிதி நிறுவன பெண் ஏஜெண்டை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். இவர் ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது கட்டுமான தொழில் செய்து வந்தார். அப்போது அவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாட்டுநல்லூரில் வீடு கட்டி குடியேறியுள்ளார்.
இதையும் படிங்க;- காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!
இந்நிலையில், செந்தில்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகே மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில், முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செந்தில்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்ததனர்.
இதனிடையே, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் GAT என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் செந்தில் குமார் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில் அந்நிறுவனம் பலரிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தில் ஏஜெண்டான விஜயலஷ்மியை தேடிச் சென்ற செந்தில்குமார் முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக GAT நிறுவன பண மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் செந்தில்குமார் புகார் அளித்த ஆத்திரத்தில் விஜயலஷ்மி கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- குப்பையில் கை, சாக்கடையில் கால்,கிணற்றில் தலை! 70 ஆண்டுக்கு பிறகு ஆளவந்தார் மர்டரை நினைவுப்படுத்தும் கோவை கொலை