பாட்காஸ்டில் பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. ஹிந்தி உள்ளிட்ட 5 மொழியில் இதை கேட்கலாம் - லிங்க் உள்ளே!
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பாட்காஸ்ட் ஒளிபரப்பு நாளை செப்டம்பர் 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. அதை எப்போது, எப்படி கேட்கலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
சுமார் மூன்று நாட்களுக்கு முன்பாக ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதில் கடந்த சில மாதங்களாகவே உங்களில் ஒருவன் என்கின்ற தலைப்பின் கீழ் கேள்வி மற்றும் பதில் வடிவில் பல்வேறு விஷயங்கள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
திமுக கழகமானது 75வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பழம்பெரும் கட்சி, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இது திகழ்ந்து வருகிறது. அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற பேரறிஞர்கள், இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன் பிறப்புகள் தான் நாங்கள் என்று அவர் கூறினார்.
இந்தியா என்கிற பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்! மத்திய அரசை விளாசும் ராகுல் காந்தி
தொடர்ந்து பேசி அவர் தற்பொழுது இந்தியாவிற்காக பேச வேண்டிய காலகட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றும் 2024 ஆம் ஆண்டில் முடிய போகிற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படியெல்லாம் உருகுலைத்திருக்கிறது, எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா குறித்து ஒரு ஆடியோ சீரியஸில் பேச உள்ளேன்.
அதற்கு ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என தலைப்பு வச்சுக்கலாமா.. தெற்கிலிருந்து வரும் இந்த குறளுக்காக காத்திருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த பதிவில் பேசி இருந்தார். இந்நிலையில் நாளை காலை 7 மணி முதல் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற பாட்காஸ்ட் ஒளிபரப்பாக துவங்கும். இதை காண மக்கள் இந்த லிங்கை www.speaking4india.com பயன்படுத்தி கேட்கலாம்.
அதே போல இந்த பாட்காஸ்ட்களை ஸ்பாட்டிஃபை (Spotify) போன்ற டிஜிட்டல் தளங்களில் கேட்க முடியும். இளம் மாணவர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் உள்ளிட்ட ஸ்டாலினின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களிலும் ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ (Speaking for India) பாட்காஸ்ட் ஒலிபரப்பு வெளியிடப்படும்.
2047 இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறியிருக்கும்! பிரதமர் மோடி சிறப்புப் பேட்டி