தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசும்போது சாரல்; தென் மாவட்ட மக்களுக்கு வாட்டும் வெயிலில் குட்நியூஸ்

அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Southern districts in tamilnadu will get rain for next 5 days says tamilnadu weatherman Rya

கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். 

ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்தால், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டால் வெயில் எப்படி இருக்கும் என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதற்கேற்றார் போல நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை வச்சு செய்யப்போகுதாம்.! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!

அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ வறண்ட, வெப்பமான, மழை குறைவான மார்ச், ஏப்ரல் முதல் பாதிக்கு பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மக்களுக்கு ஒரு குட்நியூஸ் உள்ளது. டெல்டா, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, கேரளா, கடலோர மற்றும் உள்துறை கர்நாடகா, உள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு நல்ல செய்தி.

கிழக்கு காற்றுக்கு நன்றி. அடுத்த 4-5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும். சென்னை வறண்ட வானிலை இருக்கும். வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். பெங்களூருவில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, ஆகிய இடங்களில் அடுத்த 4-5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும்..” என்று பதிவிட்டுள்ளார்.

 

இரவிலும் பிரச்சாரம் செய்த அண்ணாமலை.? சரமாரியாக அடித்துக்கொண்ட பாஜக- திமுக.!! கோவையில் பதற்றம்

முன்னதாக அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான வெப்பநிலை முதல் குறைவான வெப்பநிலையே இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். மேலும் “ கொங்கு பகுதிகள், உள் தமிழ்நாட்டு பகுதிகளிலும் வெப்பநிலை குறையும். 40-41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான இடங்களில் 37-39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். எனவே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் வரை வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு..” என்றும் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

13ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 17ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios