Asianet News TamilAsianet News Tamil

இரவிலும் பிரச்சாரம் செய்த அண்ணாமலை.? சரமாரியாக அடித்துக்கொண்ட பாஜக- திமுக.!! கோவையில் பதற்றம்

பிரச்சாரம் நேரம் கடந்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ததை தட்டிக்கேட்டதால் கோவையில் பாஜகவினர் மற்றும் திமுகவினர் நள்ளிரவில் மாறி மாறி அடித்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Clash between DMK and BJP protesting Annamalai campaigning at night KAK
Author
First Published Apr 12, 2024, 8:11 AM IST

சூடு பிடிக்கும் தேர்தல் பிர்ச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், காலையில் தொடங்கிய பிரச்சாரம் இரவு வரை நீடிக்கிறது. இந்தநிலையில் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.

இரவு 10 மணியை தாண்டி அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இது தொடர்பாக அங்கு இருந்த காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10.40 மணி வரை எப்படி அனுமதி அளிக்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

திமுக- பாஜக மோதல்

இதன் காரணமாக பாஜகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் அங்கு இருந்த பாஜகவினர் திமுக கூட்டணி கட்சியினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதற்கு திமுகவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் கூடியிருந்த பாஜக மற்றும் திமுக கூட்டணி கட்சியினரை  கலைந்து போக செய்தனர்.

இந்த களேபரங்களுக்கு இடையே பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த வேட்பாளர் அண்ணாமலை வாகனம் அங்கிருந்து கிளம்பி சென்றார். பாஜகவினரின் தாக்குதல் சம்பவத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Clash between DMK and BJP protesting Annamalai campaigning at night KAK

காவல்நிலையத்தில் புகார்

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.  இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பீளமேடு காவல்நிலையத்தில் இரவு 2 மணி அளவில் திமுகவினர்  புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

திமுக இருந்தால் கூட பரவாயில்லை! அதிமுக அழியவேண்டும் நினைத்த அண்ணாமலை! இதெல்லாம் அற்ப புத்தி! ராஜ் சத்யன்!

Follow Us:
Download App:
  • android
  • ios