சின்ன வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு குறித்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்

இந்திய சமையலை பொறுத்த வரை வெங்காயம், தக்காளி தான் முக்கியமான காய்கறிகள். மற்ற காய்கறிகள் இல்லை என்றாலும், எப்படியோ சமைத்துவிடலாம், ஆனால் வெங்காயம் தக்காளி இல்லாமல் சமைப்பது என்பது மிகப்பெரிய சவால் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே தக்காளி விலை உயர்வால், மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.120க்கு விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சூழலில் எது நடந்தாலும் மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள், தற்போது சின்ன வெங்காய விலை உயர்வு குறித்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் “ ஹலோ இன்கம் டாக்ஸ் ஆபிஸா? சார், இங்க ஒருத்தன் வெங்காய தோசை சாப்பிடுறான் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், கேஜிஎஃப் படத்தின் ஸ்கீரின் ஷாட்டை பகிர்ந்து, தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை வெங்காயத்தை பார்த்து ஷாக் ஆவது போல் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 “உரிக்க உரிக்க ஒன்னும் இல்லாத வெங்காயத்திற்கே, ஒரு வாழ்வும் மதிப்பும் வரும் போது, நமக்கு வராமலா போய்விடும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

" அடேய், ரொம்ப வருஷமா பொண்ணு பாத்து, இப்ப தாண்டா கல்யாணம் ஆகப் போகுது. கல்யாண விருந்துல வெங்காய பச்சடி இல்லன்னு ஏதாவது கலவரத்தை உண்டு பண்ணிடாதீங்க டா” என்று 90ஸ் சிங்கிள் புலம்புவது போல மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மற்றொரு பயனர் “ நான் இல்லன்னா ஞாயிற்றுக்கிழமை இல்லை என்று மட்டன், சிக்கன் பிரியாணி கூறுவது போன்றும், நான் இல்லன்னா நீங்க எவனுமே இல்லன்னு வெங்காயம் கூறுவது போன்றும் கலக்கல் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மும்பை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்.. எப்போது முதல் இயக்கம்? விவரம் இதோ..