மும்பை மற்றும் தூத்துக்குடி இடையே வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பை மற்றும் தூத்துக்குடி இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 01143 சிறப்பு ரயில் மும்பையில் இருந்து 07.07.2023 முதல் 28.07.2023 வரை இயக்கப்படும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை 13.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 23.00 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். 01144 சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து 09.07.2023 முதல் 30.07.2023 வரை மாலை 4.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 15.40 மணிக்கு மும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதர், கல்யாண், லோனாவாலா, புனே, டவுண்ட், சோலாப்பூர், கலபுர்கி, வாடி, ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா ஜே.என்., திருத்தணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்., கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும்.
130 கி.மீ வேகம்.. சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகிறது - முழு விபரம்
01 ஏசி 2-அடுக்கு, 02 ஏசி 3-அடுக்கு, 10 ஸ்லீப்பர் வகுப்பு, 04 பொது இரண்டாம் வகுப்பு மற்றும் 01 லக்கேஜ் கம் கார்டு பிரேக் வேன்கள் உள்ளிட்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும்.
முன்பதிவு: 01143 சிறப்புக்கான முன்பதிவு 05.07.2023 அன்று அனைத்து கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களிலும் www.irctc.co.in என்ற இணையதளத்திலும் சிறப்புக் கட்டணத்தில் திறக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படும் நேரங்களைத் தெரிந்துகொள்ள www.enquiry.indianrail.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். NTES செயலியைப் பதிவிறக்கியும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரயில் ஓட்டுநர்கள் எப்படி ஒரே பாதையில் ஓடும் ரயில்களுக்கு இடையே உள்ள தூரத்தை தீர்மானிக்கின்றனர்?
