கோவை சௌரிபாளையத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் பி.ஐ சஷ்டிவேல், பல்வேரு நாடுகளின் கொடிகள் மற்றும் பெயர்களை மனப்பாடம் செய்து அதை அடையாளப்படுத்துவதில் புதிய சாதனை படைத்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் கிரந்தி குமார் படி அந்த சிறுவனையும், அவரது குடும்பத்தாரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். 

சௌரிபாளையத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனான சஷ்டிவேல், தற்போது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் உலகளாவிய சாதனை புத்தகங்கள் இரண்டிலும் இடம்பிடித்துள்ளார். முறையான பயிற்சி ஏதுமின்றி, வெறும் 34 வினாடிகளில் ஆங்கில அகர வரிசைப்படி நாடுகளின் பெயர்களைச் சொல்லி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 

மேலும் மூன்று நிமிடம் 21 வினாடிகளில் 195 நாடுகளில் தேசியக் கொடிகளை அடையாளம் கண்டு நாட்டின் பெயர்களை சொல்லி பலரை வாய்பிளக்க வைத்துள்ளார் இந்த குட்டி ஜீனியஸ். பி பிரபு மற்றும் எஸ் இந்துமதி ஆகியோரின் மகனான சஷ்டிவேல், சௌரிபாலயத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஆவர். 

நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. டாக்டர் உள்பட பல ஆண்களை நைசாக ஏமாற்றிய பெண் - சென்னை போலீஸ் வலைவீச்சு!

சஷ்டிவேலுக்கு தேசியக் கொடிகள் மீது ஆர்வம் ஏற்பட்டதை, அவருடைய சகோதரர் தேர்வுக்கு தயாராகி வரும்போது தான் வேலின் தந்தை பிரபுவுக்கு தெரிந்துள்ளது. முதலில் வேடிக்கையான அண்ணன் பயன்படுத்தும் மேப்களை பார்த்து கற்க துவங்கிய வேலுக்கு நாளடைவில் அது ஒரு வழக்கமாக மாறியுள்ளது என்கிறார் அவருடைய தந்தை.

கூகுள் மேப்பில் அடிக்கடி பார்ப்பதன் மூலம், பல்வேறு நாடுகளின் மீதும், அவற்றின் கொடிகள் மீதும் வேலின் ஈர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இதனை கண்ட பிரபுவும் அவரது மனைவியும் Historical Maps ' என்ற மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மகனின் ஆர்வத்திற்க்கு தீனிபோட்டுள்ளனர். 

சாதனைகளை படைப்பது என்பது உறுதி மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே சாத்தியமாகும், தனது மகனின் தனித்துவமான அறிவை புரிந்துகொண்ட தந்தை பிரபு, தனது மகனின் சாதனையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தார். இது அவருடைய குடும்பத்திற்கே மிகவும் பெருமைதரும் நிகழ்வாக மாறியுள்ளது. 

ஆற்றில் விழுந்த தம்பி.. காப்பாற்ற சென்ற அண்ணன் - இறுதியில் மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த சோக முடிவு!