ஆற்றில் விழுந்த தம்பி.. காப்பாற்ற சென்ற அண்ணன் - இறுதியில் மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த சோக முடிவு!
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட மூவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கொடுமுடி அருகே உள்ள கொந்தளம் புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் தான் ஜி. குப்புராஜ், ஜி சவுத்ரி மற்றும் எஸ். ஜெகதீஸ்வரன். குப்புராஜ் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும், தங்களுடைய முதலாம் ஆண்டு பட்டய படிப்பை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். அதே வேலையில் குப்புராஜின் தம்பி சவுத்ரி தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஆற்றில் குளிக்கச் சென்ற சவுத்ரி, நிலை தடுமாறி ஆற்றின் ஓட்டத்தால் இழுத்து செல்லப்பட்ட நிலையில், உடனடியாக அவரைக் காப்பாற்ற அருகில் இருந்த அவரது அண்ணன் குப்புராஜ் மற்றும் அவருடைய நண்பர் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் காவிரி ஆற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில், அவர்கள் அதில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் காலத்தில் இருந்த ஜனநாயகம் கூட தற்போது; திருச்சியில் விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்
இந்த சம்பவம் குறித்து பேசிய கொடுமுடி சரக போலீசார், கொந்தளம் புதூர் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் தற்பொழுது திருவிழா நடந்து வருவதாகவும், ஆகையால் கொடுமுடி ஆற்றில் புனித நீர் எடுக்க பலர் அந்த பகுதிக்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்த சூழலில் தான் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சவுத்ரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற அவருடைய அண்ணன் மற்றும் அவருடைய நண்பர் ஆற்றில் குதித்துள்ளனர். இறுதியில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மூவரையும் தேடும் பணி முடிக்கிவிடப்பட்டது. இறுதியில் அவர்கள் மூவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி மற்றும் அவர்களுடைய நண்பன் இறந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.