முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா எப்படி தமிழக அரசியலில் மாபெறும் வெற்றி பெற்றார்களோ அதே போல விஜய்யும் வெற்றி பெறுவார் என தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள அலுக்குளி எம் ஜி ஆர் நகர் பகுதியில் சுமார் 500 கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றினார்,. நாம் நம்முடைய தாயை மட்டும் தான் அம்மா என்று அழைப்போம் ஆனால் உலகத்தில் உள்ள அனைவரும், அம்மா என்று அழைக்கக்கூடிய ஒரே தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பயணங்களை மேற்கொண்டேன், இனி என்னுடைய பயணம் இளைஞரின் எழுச்சி நாயகனாக இருக்கக்கூடிய விஜயுடன். உங்கள் ஆதரவுடன் பணிகளை நிறைவேற்றுவேன்.
இந்தப் பகுதிக்கு மக்களுக்காக வாழ்ந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரை வைத்துள்ளோம், மக்களுக்காகவே வாழ்ந்தார், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினர், தாயுள்ளத்தோடு அனைவரையும் வாழ வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அதைத்தான் செய்தார். நாளை விஜய் அவர்களும் அதை செய்யப் போகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் ஆட்சியில் அமர்ந்தவர்கள், பல முறை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எப்படி வென்று காட்டினாரோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி வென்று காட்டினாரோ அதேபோல மக்கள் சக்தியோடு விஜய் அவர்கள் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதை புரிந்து கொண்டு இருப்பார்கள்.
ஆண்டவர்களே ஆள வேண்டுமா, மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க கூடாதா, ஏன் அவர் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சி அமைப்பதற்கு ஒரு புதிய முகத்தை தேடிக் கொண்டிருந்தீர்கள், கிடைத்துவிட்டார். எல்லோரும் நினைக்கிறார்கள், கடலிலே தள்ளி விட்டதாக சொன்னார்கள், ஆனால் நான் கப்பலில் ஏறி வந்து விஜயை சந்தித்து விட்டேன். மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது எனக்குத் தெரியும்,ஆனால் அதை வெளியே சொல்ல கூடாது. அந்த சின்னத்தைப் பார்த்ததற்கு பிறகு தான், நாடே வியக்கப் போகிறது, நாடு அஞ்சப் போகிறது, விஜய் வெல்வதற்கு இனி தமிழகத்தில் எந்த இயக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


