- Home
- Tamil Nadu News
- கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!
கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!
கொங்கு மண்டலத்தில் தவெக செய்யப்போகும் சம்பவம், திமுக, அதிமுக வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செங்கோட்டையன் இதன் பின்னணியில் ஏற்பாடு செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் விஜய்
விஜயின் தவெக அரசியல் அஜெண்டா ஈரோட்டில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர உள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி விஜய் ஈரோடு வரவிருப்பதை முன்னிட்டு, பொது கூட்ட அனுமதி கேட்டு கட்சியின் முக்கிய புள்ளியும், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமுமான செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தி வெளியாகினாலும், காவல்துறை அதைப் பற்றி எழுத்துபூர்வ தகவல் வழங்கப்படவில்லை என அவர் விளக்கினார். அனுமதி நிலை தெளிவாக இல்லாமல் இருந்ததால், தவெக பாதுகாப்பு நோக்கில் மாற்று இடத்தையும் முன்கூட்டியே தேர்வு செய்ய தொடங்கியது.
செங்கோட்டையன் பிளான்
இதுபற்றி செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “விஜய் ஒரு எழுச்சி பயணமாக ஈரோடு வருகிறார்,” எனக் கூறினார். வாரி மஹால் அருகே தேர்வு செய்யப்பட்டது பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் பார்க்கிங் வசதி குறைவு இருப்பதாக போலீஸ் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமானது மறுப்பு கடிதம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னெச்சரிக்கையாக பெருந்துறை-விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே 16 ஏக்கர் பரப்பளவிலான இடத்தையும் விண்ணப்பித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜயின் தேர்தல் பயணம்
தவெக தலைவர் விஜயின் தேர்தல் பயணம் கரூர் விபத்துக்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது தவெகவுக்கு புதிய ஊக்கமாக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் என்ற வரலாறு, மேற்கு மண்டலத்தில் அவருக்குள்ள ஆதரவு காரணமாக கட்சிக்கு வலுவான கூட்டணி என கருதப்படுகிறது. ஈரோட்டில் நடைபெறவிருக்கும் விஜயின் பொதுக்கூட்டம் அரசியல் ரீதியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.
அதிமுக ஓட்டு வங்கிக்கு குறி
25 முதல் 40 ஆயிரம் பேர் வருகை தரலாம் என கட்சி தரப்பு எதிர்பார்க்கும் நிலையில், அனுமதி பெற மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின் வலுவான ஆதரவு மையம் என கருதப்படும் நிலையில், இந்த பகுதியில் விஜயின் பொதுக்கூட்டம் திமுக, அதிமுக வாக்கு வங்கி மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள அரசியல் வட்டாரங்கள் காணப்படுகின்றன. மேலும் செங்கோட்டையன் சொந்த மாவட்டம் என்பதால், இந்த கூட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோட்டில் தவெக கூட்டம்
முதலில் பவளத்தாம்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டதாக இருந்தாலும், பார்க்கிங் வசதி மற்றும் மக்கள் நெரிசல் காரணமாக அந்த இடம் பொருத்தமானதாக இல்லை என காவல்துறை தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக மாநாடு நடத்தப்பட்ட பெருந்துறை சரளை பகுதி புதிய இடமாக பரிசீலிக்கப்படுகிறது. இங்கு 75,000 பேர் கூடும் வகையில் போதுமான பரப்பளவும், வாகனம் நிறுத்தும் வசதியும் இருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த இடம் அதிகாரப்பூர்வ அனுமதி பெறும் நிலையில் ஆய்வு நடைபெற்று வருவதாக தவெக நிர்வாகிகள் பதிவு செய்துள்ளனர்.

