சனாதனம் என்றால் சமாதானம்... அதை ஒழிக்க முடியாது! வளர்ந்து கொண்டே போகும்! ஆளுநர் தமிழிசை திட்டவட்டம்

சனாதன தர்மம் என்பதை சமாதான தர்மம் என்று வாழ்வியல் முறையாக எடுத்துச் சொன்னால் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் என ஆளுநர் தமிழசை சௌந்தர்ராஜன் தெரிவிக்கிறார்.

Sanatana Dharma cannot be abolished! Will continue to grow! Says Tamilisai Soundararajan sgb

சனாதனத்தை அழித்து ஒழிக்க முடியாது என்றும் சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்ல சொல்ல அது வளர்ந்து கொண்டேதான் போகும் என்றும் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சென்னை வடபழனியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். "எதையுமே அழித்து ஒழிக்க முடியாது. சனாதனத்தை பற்றி தம்பி மிகவும் பதற்றத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது" என்றார்.

"உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய இந்த சனாதனம் நோயை பரப்பவில்லை, தர்மத்தை பரப்புகிறது. தர்மத்தை பரப்பிவரும் இந்த சனாதனத்தை எப்படி ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை" என்று கூறிய தமிழிசை, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

உதயநிதி பேச்சை வேடிக்கை பார்த்த சேகர்பாபு பதவி விலக செப் 10 வரை கெடு: அண்ணாமலை

"உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருகிறார். குருவாயூர் கோவிலுக்கு சென்று அங்குள்ள சுவாமிக்கு என்ன கொடுத்தார் என்பதை நான் பார்த்தேன். நிச்சயம் அவர்களின் குடும்பத்தை நான் பாராட்டுகிறேன்." என்றார்.

Sanatana Dharma cannot be abolished! Will continue to grow! Says Tamilisai Soundararajan sgb

"சனாதன தர்மத்தை அழித்து ஒழித்துவிட முடியாது. நீங்கள் இதுபோன்று சொல்லச் சொல்ல சனாதன தர்ம கொள்கையானது இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட சதவீத மக்கள் இதை பின்பற்றி வருகிறார்கள் அவர்களை புண்படுத்த வேண்டாம். உதயநிதி ஸ்டாலின் சில பேரை புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பல பேரை புண்படுத்திக்கொண்டிருக்கிறார்" எனவும் தமிழசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!

மேலும், உதயநிதி பதட்டத்தை தணித்து விட்டால் நன்றாக இருக்கும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். "சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்வதற்கு முன், உங்கள் தந்தையிடம் சென்று முதல் வேலையாக இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு துறையே வேண்டாம் என்று சொல்ல வேண்டும்" என்றும் அறிவுரை கூறினார்.

"கோயில் வேண்டாம் சாமி வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் உண்டியல் மட்டும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றும் திமுகவை தமிழிசை சாடியுள்ளார்.

"சனாதன தர்மம் என்பதை சமாதான தர்மம் எனவும் எடுத்துக்கொள்ளலாம். சமாதான தர்மம் என்று வாழ்வியல் முறையை எடுத்துச் சொன்னால் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இதுபோல் பல விவகாரங்கள் உங்களுக்கு சரியாக புரிவதில்லை. ஏனென்றால் நீங்கள் எதையும் சரியாக படிப்பதில்லை” என்றும் ஆளுநர் தமிழசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

23 வயதில் 100 கோடிக்கு அதிபரான வேதாந்த் லம்பா! ஆசியாவின் மிகப்பெரிய கடையை உருவாக்கிய இளைஞர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios