பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!

பிரதமர் மோடி 2014 முதல் பிரதமரானது முதல் 9 வருடமாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்று பிரதமர் அலுலவகம் கூறியுள்ளது. ஆர்டிஐ மனுவுக்கான பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Prime Minister Narendra Modi has not taken a single leave since coming to power in 2014: RTI sgb

பிரதமர் மோடி 2014 இல் இந்தியாவின் பிரதமரானது முதல் 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கான பதிலில் கூறப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரஃபுல் பி சர்தா என்பவர் இரண்டு கேள்விகளைத் தாக்கல் செய்தார்.  முதல் கேள்வி, பிரதமர் மோடி பிரதமராக இருந்து எத்தனை நாட்கள் பணிக்கு வந்தார் என்பது. இதற்கு பிரதமர் அலுவலகம் மூலம் அளிக்கப்பட்ட பதிலில், "பிரதமர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து எந்த விடுமுறையும் எடுக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது..

இரண்டாவது கேள்வி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு இன்றுவரை பிரதமர் மோடி கலந்துகொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் குறித்த விவரங்களைக் கோரியது. இதற்கான பதிலில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டிம் என்றும் என்றும் கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரோவரைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறக்க நிலைக்குச் சென்றதாக இஸ்ரோ அறிவிப்பு

Prime Minister Narendra Modi has not taken a single leave since coming to power in 2014: RTI sgb

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கேள்விகளைக் கையாளும் மத்திய பொதுத் தகவல் அதிகாரியும், பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலருமான பர்வேஷ் குமார் இந்த பதிலை அளித்திருக்கிறார்.

பிரதமரின் செயல்பாடுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டினார். பாங்காக்கில் இந்திய சமூகத்தினருடனான உரையாடலின் பேசிய ஜெய்சங்கர், "இந்த நேரத்தில் பிரதமர் மோடியைப் போன்ற ஒருவர் கிடைத்திருப்பது நாட்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். அவர் பிரதமர் என்பதால் இதைச் சொல்லவில்லை. நான் அவருடைய அமைச்சரவையில் உறுப்பினராக இருக்கிறேன்" என்றார்.

கடந்த ஆண்டு, மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பிரதமர் மோடி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்று கூறியிருந்தார்.

2016 இல் இதே போன்ற ஆர்டிஐ மனுவிலும் இதே பதில் கொடுக்கப்பட்டது. அப்போது ஆர்டிஐ தகவல் கோரியவர், நாட்டின் பிரதமருக்கான விடுப்பு விதிகள் மற்றும் நடைமுறை குறித்த விவரங்களையும் அமைச்சரவை செயலகத்திடமும் கேட்டிருந்தார். அதற்கு பிரதமர் அலுவலகத்தின் பதிலில், “பிரதமர் எப்போதும் பணியில் இருப்பார்" என்று கூறப்பட்டது.

முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய், ஹெச்.டி. தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், பி.வி.நரசிம்மராவ், சந்திரசேகர், வி.பி.சிங் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் ஏதேனும் விடுப்பு எடுத்துள்ளார்களா என்பதையும் அந்த விண்ணப்பதாரர் அறிய விரும்பினார். "முந்தைய பிரதமர்களின் விடுப்புப் பதிவு தொடர்பான தகவல்கள் இல்லை. இருப்பினும், தற்போதைய பிரதமர், மோடி பொறுப்பேற்றதிலிருந்து எந்த விடுமுறையும் எடுக்கவில்லை " என்று 2016 அக்டோபரில் பதில் கூறப்பட்டது.

2 மணிநேரத்தில் 61,000 மின்னல்கள்... 12 பேர் பலி... ஒடிசாவை மிரட்டிய அசாதாரண வானிலை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios