Asianet News TamilAsianet News Tamil

23 வயதில் 100 கோடிக்கு அதிபரான வேதாந்த் லம்பா! ஆசியாவின் மிகப்பெரிய கடையை உருவாக்கிய இளைஞர்!

வேதாந்த் லம்பா கல்லூரியில் படிக்கவே இல்லை. 2005 முதல் 2010 வரை புனேயில் உள்ள செயின்ட் மேரி பள்ளியில் படித்தார். ஆனால், உயர்நிலைப் பள்ளி படிப்பையும் பாதியில் நிறுத்தியவர்.

Meet Vedant Lamba, 23-year-old school dropout who sells Rs 100 crore worth of old shoes sgb
Author
First Published Sep 3, 2023, 8:34 PM IST

வேதாந்த் லம்பா பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டு மெயின் ஸ்ட்ரீட் டிவி என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். பின்னர் அந்தச் சேனலை மெயின் ஸ்ட்ரீட் மார்க்கெட்பிளேஸ் என்ற ஷூ விற்பனை செய்யும் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக உருவாக்கினார். அதிலிருந்து அவரது நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

வேதாந்த் லம்பா கல்லூரியில் படிக்கவே இல்லை. 2005 முதல் 2010 வரை புனேயில் உள்ள செயின்ட் மேரி பள்ளியில் படித்தார். ஆனால், உயர்நிலைப் பள்ளி படிப்பையும் பாதியில் நிறுத்தியவர். தனது தொழில் பற்றிப் பேசும் அவர், "நான் மட்டும் இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. 17-19 வயதுள்ள பலர் பழைய காலணிகளை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் 20,000 ரூபாயில் தொழில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்." என்கிறார்.

இந்தியா என்கிற பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்! மத்திய அரசை விளாசும் ராகுல் காந்தி

பள்ளியில் படிக்கும் போது இந்த் தொழில் வாய்ப்பு பற்றி அதிகம் அறிந்திருக்காத லம்பா, 16 வயதில் தனது யூடியூப் சேனல் தொடங்கியபோது தனக்கான உலகத்தைக் கண்டுபிடித்தார். இவரது நிறுவனம் முதல் ஆண்டில், ரூ.7 கோடிக்கு விற்பனை செய்தது. அடுத்த மாதத்தில் இந்த மாதாந்திர விற்பனை மதிப்பு ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கிறார்.

Meet Vedant Lamba, 23-year-old school dropout who sells Rs 100 crore worth of old shoes sgb

அரிய வகை ஷூக்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் அவர் இந்தியாவில் மறுவிற்பனை சந்தையின் நிலை குறித்துப் பேசியுள்ளார். "வாடிக்கையாளர்கள் ஏர் ஜோர்டான் 1, நைக், லூயிஸ் உய்ட்டன், ஏர்ஃபோர்ஸ் 1 ஆகியவற்றை விரும்புகிறார்கள். மறுவிற்பனை சந்தையில் ரூ.20,000 மதிப்புள்ள ஷூவை ரூ.2 லட்சம் வரை விற்கப்படுகிறது" என்கிறார்.

"ஒரு ஜோடியை ஜோர்டான் ஷூவைை ரூ.13 லட்சத்துக்கு விற்றதாகவும், அதன் மூலம் ரூ.2 லட்சம் கமிஷன் கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார். வெறும் ரூ.1.5 லட்சம் சந்தை விலை உள்ள ஷூவை ஒருவர் 7-8 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்" என்றும் லம்பா தெரிவிக்கிறார்.

லம்பாவின் நிறுவனம் டெல்லியில் ஒரு பிரத்யேகமான கடையையும் தொடங்கியுள்ளது. டெல்லியில் 1600 சதுர அடி பரப்பில் விரிந்திருக்கும் இந்தக் கடை ஷூக்களை மறுவிற்பனை செய்யும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கடையாகும்.

பிஞ்சுக் குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்று, சடலங்களுடன் அசந்து தூங்கிய தாய்!

Follow Us:
Download App:
  • android
  • ios