Asianet News TamilAsianet News Tamil

உச்ச நீதிமன்ற அனுமதியுடன் தமிழகம் முழுவதும் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு

கோவையில் இன்று நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலம் துடியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி, சேரன் காலனி விஸ்வநாதபுரம் வழியாக துடியலூர் பொருட்காட்சி மைதானத்தை அடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது

RSS parade in many parts of Tamil Nadu with the permission of Supreme Court sgb
Author
First Published Nov 19, 2023, 8:18 PM IST | Last Updated Nov 19, 2023, 8:30 PM IST

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது.

கோவையில் இன்று நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலம் துடியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி, சேரன் காலனி விஸ்வநாதபுரம் வழியாக துடியலூர் பொருட்காட்சி மைதானத்தை அடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் விஜயதசமி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இந்த ஊர்வலம் நடைபெறும். தமிழக அரசு தொடர்ந்து இந்த அணிவகுப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. அதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கையைச் சுடும் ஐபோன் 15! ஹீட்டிங் பிரச்சினையை சரிசெய்யப் போராடும் ஆப்பிள் நிறுவனம்!

இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை ரத்து செயத உச்ச நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடந்தது.

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் காக்கி நிற கால் சட்டையும் வெள்ளி நிற மேல்சட்டையும் சீருடையாக அணிந்த சுமார் 700 ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டனர். காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.

ஒரு வருடம் வேறு ஒருவராக வாழ்ந்தால்... மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தாய்லாந்து அழகி சொன்ன நச் பதில்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios