கையைச் சுடும் ஐபோன் 15! ஹீட்டிங் பிரச்சினையை சரிசெய்யப் போராடும் ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் ஐபோன் 16 மொபைல்களில் வெப்பத்தைக் குறைக்கும் திறனை ஏற்படுத்த கிராபீன் ஹீட் சிங்க் மற்றும் மெட்டல் பேட்டரி கேஸ் ஆகியவற்றை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

Apple working to ensure iPhone 15 heating issues aren't passed on to iPhone 16 sgb

ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் மொபைல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், விரைவிலேயே ஐபோன் 15 மொபைல்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும்போதே அதிகம் சூடாவதாக பல பயனர்கள் புகார் தெரிவித்தனர். ஆப்பிள் உடனடியாக இந்தச் சிக்கலைக் கண்டறிந்து சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், இந்தப் பிரச்சினை ஐபோன் 16 மாடல்களில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஹார்டுவேர் மாற்றம் மூலம் தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 16 மொபைல்களில் வெப்பத்தைக் குறைக்கும் திறனை ஏற்படுத்த கிராபீன் ஹீட் சிங்க் மற்றும் மெட்டல் பேட்டரி கேஸ் ஆகியவற்றை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

சுமாரான போட்டோவையும் சூப்பராக மாற்றலாம்! இன்ஸ்டாகிராமில் கலர் கலரா புதிய ஃபில்டர்ஸ் அறிமுகம்!

Apple working to ensure iPhone 15 heating issues aren't passed on to iPhone 16 sgb

தாமிரத்தை விட பத்து மடங்கு அதிக வெப்ப கடத்துத்திறன் கொண்ட உலோகம் கிராபீன். இது வெப்பத்தைக் கட்டுப்படுத்த சிறந்த பொருள் என்று ஆப்பிள் கருதுகிறது. ஐபோன்களில் விசிறி போன்ற எதையும் பயன்படுத்தி வைப்பத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இட வசதி இருக்காது.

எனவே மொபைல் சூடாகாமல் இருக்க வெளிப்புறக் காற்றையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இந்நிலையில், ஹீட் சிங்க்களை பயன்படுத்துவது சரியாக இருக்கும். சுற்றியுள்ள பொருட்களை விட அவை மிகவும் திறமையான வெப்ப கடத்தல் திறனைக் கொண்டிருப்பதால்,  அவை வெப்பத்தை தேவையில்லாத பகுதிகளிலிருந்து அகற்றும்.

தற்போது உள்ள குளிரூட்டும் முறையை விட கிராபீன் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஐபோன் 16 மாடல்களில் பயன்படுத்தப்பட்டால் அவை வெப்பத்தை மிகவும் திறமையாக சமாளிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

AI குரலைக் கேட்டு ஏமாந்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் அபேஸ்! இந்த மாதிரி கால் வந்தா உஷாரா இருங்க...

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios