பத்ரி சேஷாத்ரியை உடனே விடுதலை செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கடிதம்
எழுத்தாளரும் பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரியை உடனே விடுதலை செய்ய வேண்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கடிதம் எழுதியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் பதிப்பாளரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரியை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், பத்ரி சேஷாத்ரி கைது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுத்தாளர் ராமச்சந்திர குஹா அனுப்பிய மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:
"சமீபத்தில் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டதைக் குறித்து இதனை எழுதுகிறேன். திரு சேஷாத்ரியின் அரசியல் கருத்துக்களை நான் ஆதரிக்கவில்லை. இருப்பினும் அவரது கைது இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு முரணானது. இது உங்கள் அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு காலங்காலமாக சிறந்த இலக்கியங்களின் தொட்டிலாக இருந்து வந்தது உங்களுக்கு தெரியும்.
தண்ணீர் கேட்ட மாற்றுத் திறனாளியை தாக்கிய ஜவான்கள்! வைரலாகும் உ.பி.யில் நடந்த கொடுமை!
சமீப காலங்களில், கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளும் இலக்கியத்திற்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக பாராட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ராஜாஜி, அண்ணா, மு. கருணாநிதி ஆகிய மூன்று முதல்வர்களும் அடங்குவர். இந்த வளமான இலக்கிய மற்றும் அறிவார்ந்த வரலாற்றைக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கருத்துக்களுக்காக எழுத்தாளர்களைத் துன்புறுத்திய இந்திய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் கடைசியாகச் சேர்ந்திருக்கிறது.
இந்திய உச்ச நீதிமன்றத்தை விமர்சித்ததாக திரு சேஷாத்ரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகம் செயல்படும் நாட்டில் இத்தகைய விமர்சனங்கள் கைதுக்கான அடிப்படையாக இருக்க முடியாது. அவர் மீது வழக்கு தொடரப்பட்டால் அது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் முன்கூட்டிய கைது என்பது அரசியல் பழிவாங்கும் செயலாகவே தோன்றுகிறது.
சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே விவசாயி! இவர் ரயில் வாங்கியது எப்படி தெரியுமா?
கருணாநிதியின் பெயரில் ஒரு நூலகத்தை சமீபத்தில் திறந்து வைத்துள்ளீர்கள். கடந்த ஆண்டு சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை உங்கள் அரசு ஏற்பாடு செய்தது. ஆயினும், திரு சேஷாத்ரி கைது செய்யப்பட்டதால்,இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் அரசாங்கத்தின் செயல்கள் வெற்றுத்தனமாக தோன்றுகின்றன. தமிழ்நாடு அரசுடன் ஆழ்ந்த தனிப்பட்ட தொடர்பு கொண்ட எழுத்தாளர் என்ற முறையில், திரு சேஷாத்ரியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு எழுத்தாளர் ராமச்சந்திர குஹா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி, பத்ம பூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ராமச்சந்திர குஹா. இவரது India After Gandhi, Gandhi Years That Changed the World முதலிய பல நூல்கள் உலகப் புகழ்பெற்றவை. இவரது India After Gandhi நூல் தமிழில் பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஐஐடி கேண்டீனில் அசைவத்துக்கு அனுமதி மறுப்பு... சர்ச்சையைக் கிளப்பிய நோட்டீஸ்!