தண்ணீர் கேட்ட மாற்றுத் திறனாளியை தாக்கிய ஜவான்கள்! வைரலாகும் உ.பி.யில் நடந்த கொடுமை!
உ.பி.யில் தண்ணீர் கேட்ட மாற்றுத்திறனாளியை இரண்டு பிஆர்டி ஜவான்கள் கொடூரோமாகத் தாக்கி அவரது வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவில் தண்ணீர் கேட்ட மாற்றுத்திறனாளி ஒருவரை இரண்டு பிராந்திய ரக்ஷா தளத்தைச் (பிஆர்டி) சேர்ந்த ஜவான்கள் நடுரோட்டில் வைத்து தாக்கும் காட்சியின் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. வீடியோவில், ஒரு மாற்றுத்திறனாளி தனது மூன்று சக்கர வண்டியில் அமர்ந்திருப்பதையும், அதே நேரத்தில் சீருடை அணிந்த இரண்டு பிஆர்டி ஜவான்கள் அவரை கடுமையாகத் தாக்குவதையும் காணலாம்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்த, தலைமை வளர்ச்சி அதிகாரி ரவீந்திர குமார் மூன்று அதிகாரிகள் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். அதே நேரத்தில் இரண்டு பிஆர்டி ஜவான்ளும் ராஜேந்திர மணி மற்றும் அபிஷேக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என எஸ்பி சங்கல்ப் சர்மா கூறுகிறார்.
வெட்கக்கேடான ஆட்சி! மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்து முறையிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்
ஜவான்கள் இருரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 26 வயதான சச்சின் சிங், 2016ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ரயில் விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்தவர். அவர் சிம் விற்பனையாளராகவும், ஒரு உணவகத்தில் டெலிவரி ஊழியராகவும் பணியாற்றுகிறார்.
சச்சின் சிங் சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் ஆமை ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். அதை எடுத்து துக்தேஷ்வர்நாத் கோவில் அருகே உள்ள குளத்தில் கொண்டுசென்று விட்டுச் சென்றிருக்கிறார்.
"குளத்திலிருந்து திரும்பி வரும் வழியில் இரண்டு ஜவான்கள் இருப்பதைப் பார்த்தேன். ஆமையைப் பிடித்ததால் என் கையில் அதன் வாசனை வந்ததால் அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டேன்" என்று சச்சின் கூறுகிறார். “அப்போது அவர்கள் என்னை எப்படியாவது சிறையில் தள்ளி அடிக்கப்போவதாக மிரட்டத் தொடங்கினர். எனது மூன்று சக்கர வாகனத்தின் சாவியையும் பறித்துச் சென்றனர்." என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த சம்பவத்தைச் மொட்டை மாடியில் இருந்து பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
பாகிஸ்தானில் அரசியல் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி, 200 பேர் காயம்