வெட்கக்கேடான ஆட்சி! மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்து முறையிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்
மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என்று இந்தியா கூட்டணியின் குழு சாடுகிறது
இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர் அடங்கிய குழு இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்துப் தங்கள் சுற்றுப்பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டது.
ஆளுநர் உய்கேயிடம் சமர்ப்பித்த ஒரு கடிதத்தில், மணிப்பூர் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அனைத்து பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுத்து அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
"அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் செய்வது மிகவும் அவசரமானது. மணிப்பூரில் கடந்த 89 நாட்களாக சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மணிப்பூரில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் தலையிட்டு அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மண் அள்ளி செல்ஃபி எடுங்கள்! சுதந்திர தினம் கொண்டாட புதுசா ஐடியா கொடுக்கும் பிரதமர் மோடி
இந்தியா கூட்டிணியின் குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பாலில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று, நிவாரண முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடியது.
பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம், மணிப்பூரில் நடந்த வன்முறைகள் மீதான அவரது வெட்கக்கேடான அலட்சியத்தைக் காட்டுகிறது என்றும் ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் அரங்கேற்றியுள்ள மோதலினால் ஏற்பட்ட இழப்புகளின் விவரங்களையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன, 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்று கடிதத்தில் கூறப்படுகிறது. மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என்றும் இந்தியா கூட்டணியின் குழு சாடுகிறது.
மணிப்பூர் சுற்றுப்பயணத்துக்குப் பின் டெல்லி திரும்பிய திமுக எம்.பி. கனிமொழி, மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார். "நாங்கள் சென்றிருந்தபோதுகூட ஓர் இடத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்" என்றும் கூறிய அவர், நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் வீட்டுக்குச் செல்ல அஞ்சி முகாம்களிலேயே தங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!
செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி. சுஷ்மிதா தேவ், மாநில மக்களுக்கு எதிர்க்கட்சி கூட்டணி துணை நிற்கும் என்றும், மணிப்பூருக்கு பிரதமர் பொறுப்பேற்க நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை போராடுவோம் என்றும் உறுதியளித்தார்.
எதிர்க்கட்சிகள் நாடகமாடுகின்றன எனவும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதாகவும் குற்றம் சாட்டும் பாஜக, மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பவில்லை எனவும் சுஷ்மிதா தேவ் குறை கூறினார். காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மணிப்பரின் நிலை குறித்து ஆளுநரே தங்களிடம் வருத்தம் தெரிவித்ததாகச் சொல்கிறார்.
முதல்வர் என் பிரேன் சிங் ராஜினாமா கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதால், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மே 3 அன்று வன்முறை வெடித்ததில் இருந்து குறைந்தது 180 பேர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவி வெப்பமயமாதலுக்கு பலிகடாவாகும் கேரளா! 2050க்குள் இந்த 4 மாவட்டங்கள் காலி!