கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்த நபருக்கு 40,000 பக்கங்கள் கொண்ட கோப்புகளில் பதில் கிடைத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரி மனு அனுப்பிய நபருக்கு 40,000 பக்கங்கள் கொண்ட பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரைச் சேர்ந்த தர்மேந்திர சுக்லாவுக்கு இந்த பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ. மூலம் பெறும் பதில்களுக்கு ஒரு பக்கத்திற்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்துவேண்டும். ஆனால், இந்த பதிலைப் பெருவதற்கு சுக்லா எந்த கட்டணமும் செலுத்தவில்லை.
தகவல் கோரி விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் பதிலளிக்கப்படவில்லை என்ற காரணத்தால், சுக்லா செலுத்தவேண்டிய கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. கட்டுக்கட்டாக பதில் கோப்புகள் இருந்ததால் இன்று ஒரு காருடன் தகவல் பெறும் அலுவலகத்துக்குச் சென்ற சுக்லா, அவற்றை கார் முழுவதும் அடைத்து வைத்து வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் கவுண்ட் டவுன் தொடங்கியது! 7 சாட்டிலைட்களுன் நாளை விண்ணில் பாய்கிறது!
"கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை வாங்குவது தொடர்பான டெண்டர்கள் மற்றும் பில்கள் பற்றிய விவரங்களைக் கோரி நான் இந்தூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியிடம் தகவல் அறியும் உரிமைக்கான மனுவைச் சமர்ப்பித்தேன்" என்று சுக்லா சொல்கிறார்.
ஒரு மாதத்திற்குள் தகவல் வழங்கப்படாததால், அவர் முதல் மேல்முறையீட்டு அதிகாரி டாக்டர் ஷரத் குப்தாவை அணுகியுள்ளார். அவர் தனது மனுவை ஏற்றுக்கொண்டு, பதில் அளிக்க ஆன தாமதம் காரணமாக, இலவசமாக தகவல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுக்லாவுக்கு சரியான நேரத்தில் தகவல் வழங்கப்படாததால், அரசு கருவூலத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனு மீது நடவடிக்கை எடுக்காத பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்தூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிக்கு உத்தரவிட்டதாக டாக்டர் குப்தா கூறியுள்ளார்.
'பாவ யாத்திரை' என விமர்சித்த ஸ்டாலின்... பங்கமாக பதிலடி கொடுத்த அண்ணாமலை