Asianet News TamilAsianet News Tamil

பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் கவுண்ட் டவுன் தொடங்கியது! 7 சாட்டிலைட்களுன் நாளை விண்ணில் பாய்கிறது!

சிங்கப்பூரின் TeLEOS-2 செயற்கைக்கோளுக்குப் பின் DS-SAR செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி56 (PSLV-C56) ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது.

Countdown for launch of PSLV-C56 commences in Sriharikota
Author
First Published Jul 29, 2023, 6:19 PM IST | Last Updated Jul 29, 2023, 6:27 PM IST

சிங்கப்பூரின் ஒரு செயற்கைக்கோள் உள்பட ஏழு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி56 (PSLV C56) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த TeLEOS-2 செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் பி.எஸ்.எல்.வி. சி.55 (PSLV-C55) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு செயற்கைக்கோள் விண்ணில் ஏவ ஜூலை 30ஆம் நாள் முடிவு செய்யப்பட்டது. இந்த முறை DS-SAR என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது.

நாயாக மாறிய மனிதன்! முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய அதிசயம்! வைரல் வீடியோ!

சிங்கப்பூரின் இந்த DS-SAR செயற்கைக்கோள் ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இத்துடன் நியூஸ்பேஸ் இந்தியா (NewSpace India) என்ற தனியார் நிறுவனத்தின் ஆறு செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி56  (PSLV-C56) ராக்கெட் மூலம் ஏவப்படும்.

Countdown for launch of PSLV-C56 commences in Sriharikota

535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் (NEO) செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும். ஜூலை 30ஆம் தேதி (நாளை) காலை 06:30 மணிக்கு ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாயும்.

இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளதை என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோள் சிங்கப்பூரின் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு தேவையான செயற்கைக்கோள் படங்களை அனுப்பபயன்படுத்தப்படும்.

இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பகல், இரவு என அனைத்து வானிலையிலும் செயல்படும் வகையிலும், தெளிவான படங்களை அனுப்பக்கூடிய திறனுடனுடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 செயற்கைக் கோள்கள் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இஸ்ரோ அதிகாரிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சென்று, பிஎஸ்எல்வி சி56  (PSLV-C56) ராக்கெட் மாதிரியை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

'பாவ யாத்திரை' என விமர்சித்த ஸ்டாலின்... பங்கமாக பதிலடி கொடுத்த அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios