Asianet News TamilAsianet News Tamil

நாயாக மாறிய மனிதன்! முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய அதிசயம்! வைரல் வீடியோ!

ஜப்பானைச் சேர்ந்த நபர் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தன்னை ஒரு நாயாக மாற்றிக்கொண்டு, முதல் முறையாக பொதுவெளியில் வலம் வந்துள்ளார்.

Japanese man transforms into human dog by spending 20,000 Dollar, takes first walk in public
Author
First Published Jul 29, 2023, 4:47 PM IST

ஜப்பானியர் ஒருவர் மிகப்பெரிய தொகையைச் செலவு செய்து ஒரு நாயாக மாறியுள்ளார். அந்த நபர் தனது மனித உருவத்தில் இருந்து நாயாக மாறுவதற்கு 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவிட்டுள்ளார்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் (Zeppet), மனிதர்களுக்கு ஹைப்பர்-ரியலிஸ்டிக் நாய் வேஷத்தை உருவாக்கியுள்ளது. இதனை உருவாக்க 40 நாட்கள் ஆகியிருக்கிறது. தத்ரூபமாகத் தெரியும் சிலைகள், உடைகள், 3-டி மாடல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்தோனேஷியா.. மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிப்பு - உருவாகும் புதிய பிரச்சனை!

"இந்த மாடல் காலி (collie) இனத்தைச் சேர்ந்த நாயைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நான்கு கால்களில் நடக்கும் உண்மையான நாயின் தோற்றத்தை உருவாக்குகிறது" என்று ஜெப்பெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சொல்கிறார்.

அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முதல் முறையாக தான் நாய் உருவத்துக்கு மாறியிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  ‘I want to be an animal' (நான் மிருகமாக இருக்க விரும்புகிறேன்) என்ற தனது சேனலில் இந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ஜெர்மன் தொலைக்காட்சிக்காக ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

நாய் உருவம் எடுத்தவர் நடத்திவரும் ‘I want to be an animal' யூடியூப் சேனலில் 31,000 க்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். நாயாக மாறிய அனுபவம் பற்றிக் கூறும் அவர், "நான் இப்போது ஒரு காலி நாய் ஆகிவிட்டேன். நான் ஒரு விலங்காக வேண்டும் என்ற என் சிறுவயது கனவை நான் நிறைவேற்றினேன்!" என்று சொல்கிறார்.

திருட்டில் தொடங்கிய காதல் கதை! மொபைலை அபேஸ் செய்த நபருடன் காதலில் விழுந்த பெண்!

Follow Us:
Download App:
  • android
  • ios