திருட்டில் தொடங்கிய காதல் கதை! மொபைலை அபேஸ் செய்த நபருடன் காதலில் விழுந்த பெண்!

பிரேசிலில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய இமானுவேலா என்ற பெண் தான் முதல் முதலில் தன் காதலனைச் சந்தித்த கதையை விவரித்துள்ளார்.

Brazilian Woman Falls In Love With Man Who Stole Her Phone, Their Bizarre Story Is Now Viral

பிரேசிலில் ஒரு பெண் மொபைல் போனைத் திருடிச் சென்ற ஒருவருடன் காதலில் விழுந்திருக்கிறார். அவர்களின் வினோதமான காதல் கதை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் வெளியிட்ட ட்விட்டர் வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்து வருகின்றன.

பிரேசிலில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய இமானுவேலா என்ற பெண் தான் முதல் முதலில் தன் காதலனைச் சந்தித்த கதையை விவரித்துள்ளார். "நான் அவர் வசிக்கும் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, அடையாளம் தெரியாத நபரால் நான் ஏமாற்றப்பட்டேன்" என்று தன் போன் திருடப்பட்ட தருணத்தை நினைவுகூர்கிறார்.

மறுபுறம், அடையாளம் தெரியாத திருடனாக இருந்து காதலனாக மாறிய இளைஞர், திருடிய பின் போனில் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தேன். அதற்குப் பிறகு, என் மனம் மாறிவிட்டது என்று கூறுகிறார்.

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்குத் தூக்கு! 20 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை!

"என்னை ஒரு பெண்ணும் காதலிக்கவில்லை என்ற சோகத்தில் இருந்தேன். அவளுடைய போட்டோவை போனில் பார்த்ததும், 'என்ன அழகு... தினமும் இப்படி ஒரு அழகியைப் பார்க்க முடியாது' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். அவளிடம் திருடியதற்காக வருந்தினேன்." என்றும் அவர் சொல்கிறார்.

வீடியோவில் அந்த ஜோடியை பேட்டி எடுத்த நபர், "அப்படியானால் நீங்கள் அவரது போனைத் திருடிய பின் அவரது இதயத்தையும் திருடிவிட்டீர்களா?" என்று நகைச்சுவையாகக் கேட்கிறார். அதற்கு உடனே பதில் அளித்த திருட்டுக் காதலர், "சரியாகச் சொன்னீர்கள்" என்று புன்னகையுடன் கூறுகிறார்.

இருவரும் இப்போது இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருப்பினும், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டார்களா என்று தெரியவில்லை.

ஆனால், திருட்டில் தொடங்கிய அவர்களின் காதல் கதை ட்விட்டர் பயனர்களைக் கவர்ந்துவிட்டது. இதுபோன்ற சாத்தியமில்லாத காதல் கதைகள் எல்லாம் பிரேசிலில் தான் உருவாகும் என்று ஒருவர் வேடிக்கையாக கூறுகிறார். இன்றொருவர், இது அழகான காதல் கதை என்றும் காதல் எங்கும், எந்த சூழ்நிலையிலும் மலரும் என்றும் சொல்கிறார்.

"காதலால் எதையும் சாதிக்க முடியும்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது. ஆனால் இதுதான் உண்மையான காதல்" என மற்றொருவர் கூறுகிறார்.

அமீரகத்தில் செட்டிலாக நினைக்கும் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர்.. ஏன்? - அதிகாரப்பூர்வ ஆய்வு சொல்வதென்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios