அமீரகத்தில் செட்டிலாக நினைக்கும் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர்.. ஏன்? - அதிகாரப்பூர்வ ஆய்வு சொல்வதென்ன?
அமீரகம், அதாவது UAE (United Arab Emirates), இங்கு பல இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து அங்கு சென்று வேலை செய்யும் பலர் அங்கேயே செட்டில் ஆகா நினைப்பதாக ஒரு ஆய்வின் முடிவு கூறியுள்ளது. கடந்த செவ்வாயன்று National Bonds நிறுவனம் வெளியிட்ட புதிய ஆய்வு ஒன்றின் முடிவின்படி, அமீரகத்தில் தற்போது வேலைசெய்யும் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 37 சதவிகிதம் வெளிநாட்டவர்கள், அங்கேயே தங்கள் மீதமுள்ள ஓய்வு காலத்தை கழிக்க விரும்புகிறார்கள் என்று கூறுகின்றது.
National Bondsன் தலைமை நிர்வாக அதிகாரி முகமது காசிம் அல் அலி, கோல்டன் விசா மற்றும் ஓய்வூதிய விசா காரணமாக நமது அமீரகத்தில் அதிகமானோர் ஓய்வு பெற விரும்புகின்றனர் என்று சுட்டிக்காட்டினார். சுமார் 2,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்களை உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பில், எட்டு சதவிகிதத்தினர் மட்டுமே தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல மேலும் 8 சதவிகித மக்கள், தங்களது கனவு இலக்காக உள்ள ஒரு நாட்டில், குடிபெயருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் சில சதவிகித மக்கள் இன்னும் தங்கள் ஓய்வை குறித்து இன்னும் திட்டமிடவில்லை. தொற்றுநோய்க்குப் பிறகு National Bonds நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நிதி, கணிசமாக அதிகரித்துள்ளது.
பூனைகளை தாக்கும் பறவைக்காய்ச்சல்.. மனிதர்களுக்கு ஆபத்தா? WHO விளக்கம்..
இது கடந்த ஆண்டு இறுதியில் 8 பில்லியனில் இருந்து 13 பில்லியனாக உயர்ந்துள்ளது. தற்போது அதன் அளவு 14 பில்லியனாக வந்து நிற்கிறது.மேலும் அந்த நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி 84 சதவீத ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள், அவசரகால நிதியை வைத்திருப்பது முக்கியம் என்று நம்புவதாக கூறுகின்றது. அவர்களில் பெரும்பாலோர் சொந்தமாக வணிகம் செய்யவும், வீடு வாங்கவும குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க அவ்வாறு செய்வதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அங்கு நல்ல சலுகைகள் கிடைத்து வருகின்றது, ஆகவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அங்கு செல்பவர்கள் பலர் அங்கேயே குடிபெயர்வதை ஒரு குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஏன் கடந்த பல ஆண்டுகளாக நமக்கு தெரிந்த பலர் துபாய், அபு தாபி போன்ற அமீரக நாடுகளில் குடிபெயர்ந்திருப்பதை பார்த்திருப்போம்.
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்குத் தூக்கு! 20 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை!