சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்குத் தூக்கு! 20 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை!

அதிகாரிகள் சிங்கப்பூரின் போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களைக் குறிப்பிட்டு மரண தண்டனைக்குப் பரிந்துரைத்தாலும், சமூக ஆர்வலர்கள் அதை எதிர்க்கின்றனர்.

Singapore To Execute Woman For Drug Trafficking, First Time In 20 Years: Report

உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ள நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். அவை சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமானவை என்று அந்நாடு கருதுகிறது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பெண்ணை சிங்கப்பூர் இந்த மாதம் தூக்கிலிடவுள்ளது.

சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் மற்றும் 500 கிராம் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும். சாரிதேவி ஜமானி என்ற பெண் 2018ஆம் ஆண்டில் 30 கிராம் ஹெராயின் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இவர் மீதான குற்றச்சாட்டு கடந்த மார்ச் 2022 இல் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மரண தண்டனை பெற்றுள்ளார்.

சவுதி அரச குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை! அரண்மணைக்குள் என்னவெல்லாம் நடக்குது பாருங்க!

தனது விசாரணையின் போது, இஸ்லாமிய நோன்பு மாதத்தில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெராயின் பதுக்கி வைத்திருந்ததாக சாரிதேவி சாட்சியம் அளித்தார். ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்ற போதைப்பொருட்களை தனது குடியிருப்பில் இருந்து விற்பனை செய்ததையும் அவர் மறுக்கவில்லை.

Singapore To Execute Woman For Drug Trafficking, First Time In 20 Years: Report

சிங்கப்பூரைச் சேர்ந்த டிரான்ஸ்ஃபார்மேடிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்  என்ற மனித உரிமைக் குழுவின் தகவலின்படி, சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது பெண் சாரிதேவி. இதற்கு முன் இந்த தண்டனை பெற்றவர் சிகையலங்கார நிபுணர் யென் மே வொன். அவர் போதைப்பொருள் கடத்தலுக்காக 2004இல் தூக்கிலிடப்பட்டார். அதன் பிறகு முதல் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண் சாரிதேவி.

பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சன் மரண தண்டனை குற்றத்திற்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கை அல்ல என்று சிங்கப்பூர் நீதிமன்றத்தின் மரண தண்டனையை விமர்சித்துள்ளார்.

"சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டுவர உதவி தேவை. பெரும்பாலானவர்கள் அவர்களின் சூழ்நிலைகளால் அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள்" என்று பிரான்சன் ட்விட்டரில் கூறியுள்ளார். "இன்னும் தாமதமாகவில்லை, இப்போதும் சாரிதேவி ஜமானியின் மரண தண்டனையை நிறுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களின்படி மரண தண்டனை வழங்கலாம் என அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனால், சமூக ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிராக கருத்து கூறுகின்றனர்.

பூனைகளை தாக்கும் பறவைக்காய்ச்சல்.. மனிதர்களுக்கு ஆபத்தா? WHO விளக்கம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios