சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே விவசாயி! இவர் ரயில் வாங்கியது எப்படி தெரியுமா?
நீதிமன்ற உத்தரவின்படி, சம்புரான் சிங்கிற்குக் கிடைக்கவேண்டிய இழப்பீடு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1.47 கோடியாக உயர்ந்தது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த சம்புரான் சிங் என்பவர் சொந்தமாக ஒரு ரயில் இருக்கிறார். விவசாயியான இவர் நாட்டிலேயே சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே நபர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். ரயில்வே செய்த மிகப்பெரிய தவறினால் அவருக்கு இந்த ரயில் கிடைத்துள்ளது.
சம்புரன் சிங் ரயில்வேக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து, ஒரு ரயிலின் மூலம் கிடைக்கும் வருவாயில் சும்புரான் சிங்கிற்கும் பங்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
லூதியானாவில் உள்ள கட்டான கிராமத்தைச் சேர்ந்தவர் சம்புரன் சிங். 2007ஆம் ஆண்டு லூதியானா - சண்டிகர் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது இந்திய ரயில்வே விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தியது. ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் நிலத்துக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டது.
2 வருஷமா சம்பளம் வாங்காமல் உழைக்கும் அம்பானி! ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருக்கு வந்த சோதனை!
சம்புரன் சிங்கின் நலமும் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், தன் நிலத்திற்கு ரயில்வே குறைவான பணம் கொடுத்ததாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, இழப்பீடு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரித்தது. மேல்முறையீட்டில், அது மேலும் அதிகரித்து ரூ.1.47 கோடியாக உயர்ந்தது.
2012ஆம் ஆண்டு வடக்கு ரயில்வே 2015ஆம் ஆண்டுக்குள் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு போட்டது. ஆனால், ரயில்வே ரூ.42 லட்சம் மட்டுமே வழங்கியது. மீதியுள்ள 1.05 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையைக் கொடுக்க முடியவில்லை என்று ரயில்வே கூறிவிட்டது.
ரயில்வே சார்பில் பாக்கி பணத்தைச் செலுத்தாததால் 2017ஆம் ஆண்டு லூதியானா நிலையத்திற்கு வரும் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. சம்புரன் சிங் தன் வழக்கறிஞர்களுடன் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரயில் சிறைபிடிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே ரயில் விடுவிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து சம்புரான் சிங் அந்த ரயிலின் உரிமையாளராக மாறினார். இப்படித்தான் சம்புரான் சிங் நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ரயிலின் உரிமையாளர் ஆனார்.