Asianet News TamilAsianet News Tamil

ஜனநாயகத்தை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கின்ற அரசு! எப்போதும் நிலைத்ததாக வரலாறு கிடையாது! ஆர்.பி. உதயகுமார்

இயற்கை மழையை தடுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது. ஆனால் தற்காப்பு செய்து கொண்டு அதனை பாதுகாப்பாக எதிர்கொள்ளலாம்.

rb udhayakumar slams dmk government tvk
Author
First Published May 22, 2024, 4:32 PM IST | Last Updated May 22, 2024, 4:32 PM IST

நீர்நிலைகளை பாதுகாப்பதில் இந்த அரசு பூஜ்யம் மதிப்பெண் தான் பெற்று இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாடிப்பட்டி பகுதியில் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:  மிக்சாம் புயல் போல தும்பை விட்டு வாழை பிடிக்கின்ற நிலையாக இருக்கக் கூடாது. வருமுன் காப்போம் என்ற நிலையை கையில் எடுக்க வேண்டும் வந்தபின் பார்ப்போம் என்ற நிலையில் தான் இந்த திமுக அரசு செயல்படுகிறது. மதுரையில் சுமார் 10,000 பேர் வருகின்ற மாட்டுத்தாவணி பேருந்து நிலைய அருகில் உள்ள பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட் எல்லாம் சேரும் சகதியுமாய் இருக்கிறது. காய் வாங்க வருவோர் எல்லாம் நோய் வாங்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. 

இதையும் படிங்க: அமைச்சரவையை மாற்ற திட்டமிடும் ஸ்டாலின்.? மாற்றப்படுபவர்கள் யார்.? புதிய அமைச்சர்கள் யாருக்கு வாய்ப்பு.?

மூன்றாண்டு கால சாதனை என்று கூறுகிற கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தண்ணீர் புகுந்து தரைத்தளம் முழுவதுமாக தண்ணீரிலே மூழ்கி இருக்கிறது. நவம்பர் மாதத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  திறந்து வைத்த பாலம் சேதமடைந்து சீர் செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தண்ணீர் தாலுகா அலுவலகத்தில் தண்ணீர் மீனாட்சி அம்மன் கோவிலிலே தண்ணீர் என்று எல்லா இடங்களிலும் தண்ணீராக இருக்கிறது. 

கோடை வெயிலில் ஹிட் ஸ்ட்ரோக் காரணமாக மக்கள் உயிரிழக்கும் சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் கோடை மழையில் இந்த தடுப்பு நடவடிக்கை என்பது நிவாரண பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கவில்லை. இயற்கை மழையை தடுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது. ஆனால் தற்காப்பு செய்து கொண்டு அதனை பாதுகாப்பாக எதிர்கொள்ளலாம். அதை இந்த அரசு செய்ய முன்வர வேண்டும். திமுக அரசு தடுப்பணை பத்தாயிரம் கோடியில் கட்டுகிறோம் 20,000 கோடியில் கட்டுகிறோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் எடப்பாடி யார் அறிவித்து செயல்படுத்தி அரசாணை வெளியிட்ட தடுப்பணையை திமுக அரசு கிடைப்பில் போட்டுள்ளது.

இதையும் படிங்க:  காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற முடியாத நீர்வளத் துறை அமைச்சர் வாய்ஜாலம் காட்டுகிறார்! எஸ்.பி.வேலுமணி!

நீர்நிலைகளை பாதுகாப்பதில் இந்த அரசு பூஜ்யம் மதிப்பெண் தான் பெற்று இருக்கிறது. மக்களை பாதுகாக்க நிலக்கோட்டையில் காவல் ஆய்வாளராக இருக்கிற ஆய்வாளர்கள் வீட்டிற்கு பாதுகாப்பு இல்லை. கொலை கொள்ளை கற்பழிப்பு வழிப்பறி திருட்டு நடைபெறாத நாளே இல்லை காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத போது சாமானியம் மக்களுக்கு எங்கு இருக்கிறது பாதுகாப்பு. ஜனநாயகத்தை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கின்ற அரசுக்கு எப்போதும் நிலைத்ததாக வரலாறு கிடையாது இந்த மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios