அமைச்சரவையை மாற்ற திட்டமிடும் ஸ்டாலின்.? மாற்றப்படுபவர்கள் யார்.? புதிய அமைச்சர்கள் யாருக்கு வாய்ப்பு.?

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் அமைச்சரவை துறைகள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

It has been reported that Stalin is planning Kak to reshuffle the Tamil Nadu cabinet

தீவிரம் அடையும் நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அடுத்த மாதம் 4 - ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மாவட்ட செயலாளருக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கடும் உத்தரவுகளை பிறப்பித்தார். அந்தவகையில்,

 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தான் பதில் சொல்ல வேண்டும். யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார்.

இந்தியா கூட்டணிக்கு வெற்றி

இப்போது அனைத்து கூட்டணி இடங்களிலும் வெற்றி பெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் தேர்தல் வேலைகளில் சரிவர செயல்படாதவர்கள் பற்றியும் புகார்கள் சென்றுள்ளன.

அந்த வகையில் 10 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் அறிவாலயத்திற்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஒருவித கலக்கத்துடனேயே உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வருகிறது.  இது பற்றி தி.மு.க. வட்டாரத்தில் கூறும்போது, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.?

அதுமட்டுமின்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாகி வரும் நிலையில் இந்த மாற்றங்களை செய்ய தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் புதிதாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் உதயநிதிக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios