எடப்பாடியாரின் 34 நாள் எழுச்சிப் பயணத்தில் 52 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பயணத்திற்கு ஆளுங்கட்சி பல்வேறு தடைகளை ஏற்படுத்திய போதிலும், மக்களின் பேராதரவுடன் பயணம் வெற்றிகரமாக நடைபெறுவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
EPS's election tour of Tamil Nadu : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக சார்பாக மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். 100 தொகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்
மக்களை காப்போம், தமிழகத்தின் மீட்போம் என்ற எடப்பாடியாரின் எழுச்சி பயணம் கடந்த 7.7.2025 திங்கட்கிழமை அன்று கோவையில் இருந்து தொடங்கி 34 நாட்களில், 100 தொகுதிகளில் 10,000 கிலோமீட்டர் பச்சை பேருந்தில்,பச்சை தமிழர் எடப்பாடியார் 52 லட்சம் மக்களை சந்தித்தார், மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தமிழக மக்களின் இந்த பேராதரவை கண்டு அதிர்ச்சியில் .உறைந்து போய் கொண்டிருக்கிறது ஸ்டாலின் திமுக அரசு.
ஆளுங்கட்சியின் அதிகார தோரணையில் இந்த எழுச்சி பயணத்திற்கு பல்வேறு தடை கற்களை ஏற்படுத்துகிறார்கள், அந்த தடை கற்களை எல்லாம் தூள், தூளாக்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று வெற்றி சரித்திரம் படைத்திருக்கிறார் எடப்பாடியார். எடப்பாடியாரின் எழுச்சி பயணம் மக்களின் பேரதரவுடன் 234 தொகுதிகளில் வெற்றி சரித்திரம் படைக்கும். ஆளும் திமுக அரசு மக்களுக்கு அறிவித்த திட்டங்கள் எல்லாம் பட்டை நாமம் போட்டதை எல்லாம் இன்றைக்கு தோலூருத்தி காட்டி மக்களிடம் எடப்பாடியார் வெளிச்சம் போட்டு போட்டு வருவதை கண்டு ஆளும் அரசு நடுங்கி போய் உள்ளார்கள்.
பொறுமைக்கும் எல்லை உண்டு
அரசியலில் காழ்புணர்ச்சி இருக்கலாம் ஆனால் அரசியலே காழ்புணர்ச்சி இருந்தால் தமிழ்நாட்டுக்கே சாபகேடாகும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சிறுபிள்ளைத்தனமாக செய்ய ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தினால் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு, சாதுமிரண்டால் காடு கொள்ளாது, பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற சத்திய வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் எடப்பாடியார் உள்ளார். எடப்பாடியாரின் எழுச்சி பயணம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
