தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 4,000 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 4,000 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையிலும் இலவசமாகவும் ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஏழை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், தங்களது உணவு தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Pondicherry Trip: சூப்பர்.. ! பாண்டிச்சேரி போக பிளான் போட்டு இருக்கிங்களா..? அப்ப இங்க மிஸ் பண்ணாம போங்க..
ஸ்மார்ட் கார்டு அறிமுகம்:
ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் சில சமயங்களில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால், குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து, உரிய பதிவேட்டில் ஒப்புதலைப் பெற்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்கவேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.

கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள 4,000 காலி இடங்களுக்கு பணி நியமன ஆணை விரைவில் அறிவிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நியாய விலை கடைகளில் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் விரைவில் பனியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சமீபத்தில் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கம்:
அதேபோல, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3,331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

அந்த வகையில் இப்போதைக்கு எடையாளர்கள், பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின்கீழ் 33,000 ரேஷன் கடைகள் இயங்குகின்றன.இந்த கடைகளில் விற்பனையாளர், எடையாளர் என்று மொத்தம் 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் மாவட்ட வாரியாக மொத்தம் 3,300 விற்பனையாளர்கள், 600 எடையாளர்கள் என மொத்தம் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணி நியமனங்களுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: வேலை நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை... அரசு ஊழியர்களுக்கு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!
