Pondicherry Trip: போர் காரணமாக உக்ரைனில் சிக்கியிருந்த புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பி விட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் ரூ.13 கோடி மதிப்பிட்டில் புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் நட்சத்திர அந்தஸ்துடன் நவீன ஹோட்டல் கட்டுமான பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
Pondicherry Trip: போர் காரணமாக உக்ரைனில் சிக்கியிருந்த புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பி விட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் ரூ.13 கோடி மதிப்பிட்டில் புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் நட்சத்திர அந்தஸ்துடன் நவீன ஹோட்டல் கட்டுமான பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் பழைய சாராய வடிஆலை இருந்த இடத்தில் கடல் அழகை ரசிக்கும் வகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகையில் ஹோட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் ரூ.13 கோடி செலவில் தொடங்கி நடந்து வந்தது. இப்போது பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 3,000 சதுரமீட்டரில் கீழ்தளம், 2,500 சதுர மீட்டரிலும், அதற்கு மேல் சிறிய பகுதி என 6,000 சதுரமீட்டரில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் நாளை முதல் 12-14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி.. அறிவித்தது மத்திய அரசு!!

கீழ்தளத்தில் விழாக்கள் நடத்தும் வகையில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளும் கடல் அழகை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் திறந்தவெளி திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் அறையில் தங்குபவர்கள் கடல் அழகை அருகே சென்று பார்க்கும் வகையிலும் கட்டுமானப்பணி நடந்துள்ளது. தற்போது கட்டடத்துக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பேரறிவாளன்.. மகனை பார்த்து மகிழ்ச்சியில் பொங்கிய தாய்..

இந்தப் பணியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "கட்டிடப் பணி இரு மாதங்களில் நிறைவடையும். இக்கட்டடத்தை தனியாரிடம் தரலாமா என்று ஆலோசித்து வருகிறோம். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அழகிய கட்டடமாக உருவாகிய இப்பகுதியை மேலும் அழகுப்படுத்துவோம். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்" என்று குறிப்பிட்டார்.போர் காரணமாக உக்ரைனில் சிக்கியிருந்த புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பி விட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: இதுவரை 25,000 இந்தியர்கள் மீட்பு.. உதவி செய்த அனைவருக்கும் நன்றி.. அமைச்சர் உருக்கம்..
