தமிழக ஆளுநர் ரவி, உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி துணைவேந்தர்கள் மாநாடு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளுநரின் செயல் அரசியலமைப்பை மதிக்காத செயல் என்றும், சட்டவிரோதம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
Vice-Chancellors Conference : தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் ஆளுநர் ரவிக்கு எதிராக பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனம், பல்கலைக்கழக வேந்தர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், ஆளுநர் ரவி வேந்தர் என்கிற முறையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது சட்டவிரோதம் என்று கூறியும், சட்டவிரோத செயலை செய்த ஆளுநர் பதவி விலகி இருக்கவேண்டும்.
நான் தான் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்.! திமுக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் ஆர்.என். ரவி
உச்சநீதிமன்றம் கடிவாளம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி அவர்கள் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும். ஆளுநரின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் கையாளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பேரிடியை தாங்கிக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை கழக துணை வேர்ந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு செயல்
ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. எனவே, இப்போது ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலும் ஆகும். திட்டமிட்ட இந்த மோதல் போக்கிற்கு குடியரசு துணைத் தலைவரும் துணை போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆளுநர் ஒரு தபால்காரர், பச்சையாக பாஜக காரராகவே செயல்படுகிறார்- விளாசும் ஸ்டாலின்
மாநாட்டை புறக்கணியுங்கள்
ஆர்.என்.ரவியின் இந்த சட்டவிரோத துணை வேந்தர்கள் மாநாட்டு அழைப்பினை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பல்கலை கழக துணை வேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்பதுடன், துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்த வேண்டுமெனவும் சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
