MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நான் தான் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்.! திமுக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் ஆர்.என். ரவி

நான் தான் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்.! திமுக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் ஆர்.என். ரவி

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆளுநர் துணை வேந்தர் மாநாடு நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் துணை வேந்தர்களை மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

2 Min read
Author : Ajmal Khan
Published : Apr 21 2025, 07:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Governor RN Ravi Vice-Chancellors Conference : தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சிப்பது, அரசு விழாக்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவது, தமிழக சட்டப்பேரவையில் உரையை நிகழ்த்தாமர் புறக்கணிப்பது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை கிடப்பில் போடுவது என அடுத்தடுத்து பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக ஆளுங்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எனவே ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vice-Chancellors Conference

Vice-Chancellors Conference

ஆளுநர் ரவி - தமிழக அரசு மோதல்

இந்த வழக்கில் ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்ட 10 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது.  அதன்படி பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிக்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக இருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் வேந்தர் எனவும் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

34
Vice-Chancellors Conference

Vice-Chancellors Conference

துணைவேந்தர்கள் மாநாடு

அதன்படி சிறப்பு விருந்தினராக துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடு ஏப்ரல் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே வேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் ரவி எப்படி துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டலாம் என கேள்வி எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் துணை வேந்தர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை முற்றாக துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகிறது.

44
MK Stalin RN Ravi

MK Stalin RN Ravi

உச்சக்கட்ட மோதல்

ஆனால் இதற்கு ஆளுநர் மாளிகை கொடுத்துள்ள விளக்கத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஆளுநர் ரவி துணை வேந்தர்களை புதிதாக நியமிக்க மட்டுமே முடியாது. இருந்த போதும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் ரவியே தொடர்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுக்கும்- ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு
அரசியல்
மு. க. ஸ்டாலின்
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Recommended image2
LPG Price Hike: மீண்டும் எகிறிய சிலிண்டர் விலை! சாமானியர்கள் தலையில் அடுத்த இடி!
Recommended image3
Now Playing
TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved