ஆளுநர் ஒரு தபால்காரர், பச்சையாக பாஜக காரராகவே செயல்படுகிறார்- விளாசும் ஸ்டாலின்
தமிழக ஆளுநர் ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். ஆளுநர் பதவி என்பது ஒரு கௌரவப் பதவி மட்டுமே என்றும், சட்டமியற்றும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

Stalin criticizes that the governor post : தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க கூடியவர் ஆளுநர், ஆனால் அதற்கு எதிராக தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது,
அரசு கல்லூரி விழாக்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சித்தாந்தங்களை வெளிப்படுத்துவது என செயல்பட்டு வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். எனவே ஆளுநர் ரவி செல்லும் இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
Chief Minister Stalin
ஆளுநர் vs அரசு மோதல்
இந்த நிலையில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்த நிலையில், ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திருந்தது.
இதனையடுத்த ஆளுநர் ரவி வகித்து வந்த வேந்தர் பதவியானது முதலமைச்சருக்கு மாறியது. இந்த நிலையில் ஆங்கில நாளிதல் ஒன்றுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
Governor Ravi
ஆளுநர் பதவி ஒரு கௌரவப் பதவிதான்
அதில் ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான ஆளுநர் பதவி என்பது ஒரு கௌரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி- மத்திய- மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.
பச்சையான பா.ஜ.க.காரராகவே ஆளுநர் ரவி
ஆளுநர் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின். ஆளுநருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க.காரராகவே வெளிப்படுத்திக்கொள்கிறார்.
அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.