திருவள்ளூர் பகுதியை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளி வாக்கம் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (24). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சுகன்யா(20) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. ஆனால் குழந்தை இல்லை.

இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கும் அதே தெருவில் வசித்து வரும் மஞ்சுளா (18) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மஞ்சுளா திருமணம் ஆன ரஞ்சித்துடன் சுற்றி வருவதை, அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் நேற்று இவர்களுடைய வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. 

இந்நிலையில் விரக்தி அடைந்த மஞ்சுளா தன்னுடைய அறைக்கு சென்று, மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த ரஞ்சித்குமாரும் பாக்குப்பேட்டை ஏரியில் உள்ள மாந்தோப்பில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளா, மற்றும் ரஞ்சித் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.