மக்களை வருத்தி லாபம் சம்பாதிப்பதா? பெட்ரோல் விலையை ரூ.10 குறைக்க ராமதாஸ் கோரிக்கை

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

oil companies should reduce petrol price rs 10 per liter says ramadoss

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனாலும், சில்லறை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது  கண்டிக்கத்தக்கது.

மெட்ரோ ரயிலில் மீன், இறைச்சி கொண்டு செல்ல தடை; பயணிகள் கொந்தளிப்பு

2022 ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பிறகு கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6 லாபம் கிடைக்க நிலையில், பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலைகளையும் லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.  ஆனால், திடீரென அம்முடிவு கைவிடப்பட்டதன் காரணம் புரியவில்லை.

கொங்கு பகுதியில் கலைகட்டிய “கோவை விழா”; மாரத்தானில் பங்கேற்ற ஆட்சியர்

மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில்  பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios