கொங்கு பகுதியில் கலைகட்டிய “கோவை விழா”; மாரத்தானில் பங்கேற்ற ஆட்சியர்

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

coimbatore vizha collector and district higher officials participate marathon

கடந்த 4ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த கோவை விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றுவரை நடைபெற்ற கோவை விழாவில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

கோவை விழாவின் நிறைவு நாளான இன்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியின் ஒரு பகுதியாக நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டி 2.5 கிமீ,, 5கி.மீ., 10கி.மீ. என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. 

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி; தச்சன்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்

இதில் 10 கிலோமீட்டர் பிரிவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதமர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்பட காவல்துறையினர் பலரும் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றது பொதுமக்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியது. மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பலரும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

வெளியில் தலைகாட்ட முடியல; எங்களுக்கும் உதவித்தொகை வேண்டும் - வழுக்கை சங்கத்தினர் எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios